
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 200க்கும் அதிகமான இளைஞர்கள் மாயமாகி உள்ளனர், இவர்கள் அனைவரும் பாகிஸ்தானிய விசாவை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சுமார் 399 காஷ்மீர் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் பாகிஸ்தானிய விசாக்களை வழங்கி உள்ளது. இவர்களில் 218 இளைஞர்கள் தற்போது மாயமாகி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வருகின்றனரா எனும் சந்தேகம் வலுத்து வருகிறது.
மிக நீண்ட காலமாகவே பாகிஸ்தான் காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாத இயக்கங்களில் சேர தூண்டி வருகிறது என்பதை நாம் அறிவோம், ஆகவே அதிகாரிகளின் அச்சம் நியாயமானதே .