Day: June 20, 2020

கல்வான் எங்களுடையது என்ற சீனாவின் கூற்றை மீண்டும் மறுத்த இந்தியா

June 20, 2020

கல்வான் பகுதி சீனாவிற்கு சொந்தம் என்ற சீனவின் கூற்றை இந்தியா மீண்டும் மறுத்துள்ளது.இந்திய வெளியுறவு அமைச்சகம் சீனாவின் இந்த கூற்றை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட தகவல்படி ” வரலாறு படி கல்வான் எங்களுடையது ” என்பதற்கான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளார்.கல்வான் எப்போதும் சீனக்கட்டுப்பாட்டில் இல்லை என அவர் கூறியுள்ளார். எல்லையில் கட்டுமானம் ஏற்படுத்த சீன வீரர்கள் முயற்சித்ததை தடுத்த போது சீனாவின் செய்கையால் தான் ஜீன் 15 […]

Read More

கல்வான் பகுதிக்கு அதிக வீரர்களை அனுப்பும் இந்திய இராணுவம்-முரண்பாடு அதிகரிப்பு

June 20, 2020

இந்திய-சீன மோதல் நீடித்துவரும் வேளையில் நாட்டின் பிற பகுதியில் இருந்து அதிகப்படியான வீரர்களை லடாக் பகுதிக்கு இராணுவம் அனுப்பி வருகிறது. சீனா அதிக அளவிலான வீரர்களை கல்வான் பகுதிக்கு அனுப்பி வரும் வேளையில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க அளவு வீரர்களை அனுப்பி வருகிறது. வியாழன் இரவு முதலே வீரர்கள் லடாக் பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.இது தவிர எல்லையின் மற்ற பகுதிக்கும் வீரர்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மனாலி வழியாக லே செல்லும் சாலைகள் முழுக்க இராணுவ பயன்பாட்டுக்கு […]

Read More

இந்தியாவை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க விமானப்படை தயார் !!

June 20, 2020

இந்திய திருநாட்டின் பாதுகாப்பை என்ன விலை கொடுத்தும் இந்திய விமானப்படை பாதுகாக்கும் என முன்னாள் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா இந்திய விமானப்படை அகாடமியில் பயிற்சி நிறைவு செய்த இளம் அதிகாரிகள் இடையே உரையாற்றினார்.அப்போது இந்தியாவின் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய விமானப்படை தயாராக உள்ளது, கல்வான் மாவீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது என நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். இந்த கருத்தை பல முன்னாள் விமானப்படை அதிகாரிகளும் […]

Read More

எல்லையோரம் பாகிஸ்தான் அத்துமீறல் 4 சிவிலியன்கள் காயம் !!

June 20, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் செக்டாரில் இன்று மதியம் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. மோர்ட்டார்களை கொண்டும் துப்பாக்கிகளை கொண்டும் நடத்திய இந்த தாக்குதலில் 4 பொதுமக்கள் காயம் அடைந்தனர். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இன்று காலை கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் செக்டாரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More

40 வீரர்களை இழந்த சீன இராணுவம்-முன்னாள் தளபதி

June 20, 2020

இந்திய இராணுவ வீரர்களின் பதிலடி தாக்குதலில் சீன இராணுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் வீழ்த்தப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி விகே சிங் அவர்கள் கூறியுள்ளார். நாம் பதிலடியில் பல சீன வீரர்களை கைப்பற்றினோம்.நள்ளிரவில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் கட்டுமானங்கள் ஏற்படுத்த முயற்சித்தனர்.அந்த முயற்சியை தடுத்த வீரர்கள் பல சீன வீரர்களை கைப்பற்றியதாக கூறியுள்ளார்.

Read More

ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் தங்கள் மாநிலம் வழி எவ்வித கட்டுபாடுகளும் இன்றி எப்போது வேண்டுமானாலும் நகரலாம் : இமாச்சல பிரதேச அரசு !!

June 20, 2020

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நுழையும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கு எவ்வித கட்டுபாடும் இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில தலைமை செயலாளர். அணில் காச்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் விடுமுறைக்கு வரும்போது இ பாஸ் இல்லாமல் தங்களது அடையாள அட்டையை காட்டி வரலாம் எனவும், அதை போலவே வேறு மாநிலங்களில் இருந்து பணிக்கு திரும்பும் வீரர்கள் இ பாஸ் இன்றி அடையாள அட்டை மட்டும் காண்பித்து […]

Read More

பங்கோங் ஏரியில் பெரும் அளவில் சீனப்படைகள் குவிப்பு-போர் பதற்றம் தொடர்கிறது

June 20, 2020

இந்திய சீன எல்லையில் பிரச்சனை நடக்கும் மற்றும் ஒரு இடம் தான் இந்த பங்கோங் ஏரிப் பகுதி.கல்வான் ஆறு பகுதிக்கு பிறகு தற்போது சீனா இங்கு அதிக அளவலான படைகளை குவித்துள்ளது.ஆறு வாரங்கள் நேரம் எடுத்து மெதுவாக பல பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளது.அமைதி குறித்த பேச்சுவார்த்தை நடந்தாலும் இனி சீனாவை இந்த இடத்தை விட்டு வெளியேற்றி அகற்றுவது கடினமான பகுதியாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லோருடைய கவனமும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஃபிங்கர் […]

Read More

பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய அனுப்பப்பட்ட ட்ரோன்சுட்டு வீழத்தப்பட்டது !!

June 20, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில்250மீட்டர் சர்வதேச எல்லையை தாண்டி ஒரு ட்ரோன் பறந்து கொண்டிருந்ததை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 19ஆவது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் கண்டனர். உடனடியாக அந்து ட்ரோனை அவர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர் ட்ரோனை சோதனை செய்த போது ஒரு எம்4 துப்பாக்கி, அதற்கான 60 தோட்டாக்கள் மற்றும் 7 கையெறி குண்டுகள் அதில் இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இதனையடுத்து ட்ரோனையும், ஆயுதங்களையும் […]

Read More

அந்தமானில் இந்திய கடற்படை உச்சகட்ட உஷார்நிலை !!

June 20, 2020

சமீபத்திய கல்வான் பள்ளதாக்கு மோதல் அந்தமானிலும் சீனா கண் வைக்கக்கூடும் என்ற அச்சத்தை கிளப்பி உள்ளது. இந்திய நிலப்பகுதியில் இருந்து சுமார் 700 நாட்டிகல் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள அந்தமான நிகோபார் தீவுகள் சிறிது ஆபத்தான இடத்தில் தான் உள்ளன. இதை ஒட்டிய பகுதிகளில் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. சீன கடற்படையின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. சீன நீர்முழ்கிகள், கடலடி ஆராய்ச்சி கப்பல்கள் ஆகியவை பல சமயங்களில் இப்பகுதிக்கு […]

Read More

கல்வானில் வெறித்தனமாக சீனர்களை துவம்சம் செய்த இந்திய வீரர்கள் – மிரண்டு போன சீன ராணுவம் !! மேலதிக தகவல்கள் உள்ளே !!

June 20, 2020

சில நாட்கள் முன்னர் கல்வான் பள்ளதாக்கில் இந்திய சீன வீரர்கள் மோதி கொண்டனர். இதை பற்றி கிடைத்த தகவலை இங்கு பதிவ செய்கிறோம். சீன வீரர்களின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கர்னல். சந்தோஷ் பாபு சீனர்களிடம் பேசிக்கொண்டு இருக்கையில் எதிர்பாராத விதமாக அவர் மீது சீனர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனாலும் சுதாரித்து கொண்ட அவர் வெறும் கைகளால் 3 சீன வீரர்களுடன் சண்டையிட்டார், 1 சீன வீரரை கொன்றும் ஒருவனை குருடாக்கினார். அதன் பின்னரே அவர் தாக்குதலில் வீரமரணமடைந்தார். […]

Read More