Day: June 19, 2020

கல்வான் பள்ளதாக்கில் ஆற்றுப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது !!

June 19, 2020

இந்திய ராணுவம் மற்றும் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு ஆகியவை இணைந்து கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் ஆற்றின் குறுக்கே சுமார் 60மீட்டர் நீளம் கொண்ட ஆற்றுப்பாலத்தை கட்டி முடித்துள்ளனர். இந்த பாலம் மூலமாக நமது காலாட்படை வீரர்கள் எளிதில் எல்லைக்கு நகர முடியும் குறிப்பாக தவ்லத் பெக் ஒல்டி தளம் வரை செல்ல முடியும். இந்த பாலத்தை கட்டி முடிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read More

முடிவடைந்த அனைத்து கட்சி கூட்டம்-என்ன நடந்தது?

June 19, 2020

சீனப்பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் முடிவுபெற்றுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது : யாரும் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை,எந்த இந்திய நிலையும் கைப்பற்றப்படவில்லை.லடாக்கில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.இந்தியாவிற்கு எதிராக புருவம் உயர்த்தியவர்களுக்கு நல்ல பாடத்தை இந்திய வீரர்கள் கற்பித்துள்ளனர் என பேசியுள்ளார்.

Read More

ஆஸ்திரேலியாவில் இணையவழி தாக்குதல் சீனா மீது சந்தேகம் !!

June 19, 2020

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் இன்று நிருபர்களை சந்தித்து சிறிது காலமாக ஆஸ்திரேலியா மீத இணையவழி தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறினார். இந்த தாக்குதல் ஆஸ்திரேலிய வர்த்தக நிறுவனங்கள், அரசு இணையதளங்கள், மருத்துவமனை இணையதளங்கள் ஆகியவற்றை குறிவைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் இதன் பின்னனியில் சில வெளிநாட்டு சக்திகள் இருப்பதாகவும் ஆனால் யார் என்பதை குறிப்பிட விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அரசின் மூத்த அதிகாரிகள் இந்த தாக்குதல்களின் பின்னனியில் சீனா இருப்பதாக கூறுகின்றனர்.

Read More

அவசரகால தேவையாக போர் விமானங்களை வாங்கும் இந்தியா !!

June 19, 2020

லடாக்கில் இந்தியா சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் அவசரமாக இந்திய விமானப்படை தனது பலத்தை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. அதன்படி உடனடியாக 12 சுகோய்30 விமானங்கள், 21 மிக்29 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பி உள்ளது. சுமார் 5000கோடி மதிப்புமிக்க இந்த ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவை அடுத்த வாரத்திற்குள் மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

இந்திய விமானப்படை தளபதி தீடிர் லடாக் விசிட் எல்லையோரம் தளவாடங்கள் குவிப்பு !!

June 19, 2020

சமீபத்திய மோதலுக்கு பிறகு இந்திய விமானப்படை, இந்திய தரைப்படைக்கு பக்கபலமாக செயல்பட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா ஶ்ரீநகர் மற்றும் லே விமானப்படை தளங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்திய விமானப்படை தற்போது லே விமானப்படை தளத்தில் தனது அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள், சினூக் கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை நிலைநிறுத்தி உள்ளது. இதைத்தவிர இந்திய விமானப்படை தனது சுகோய்30, ஜாகுவார் மற்றும் மிராஜ்2000 ஆகிய […]

Read More

இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் – இரு கட்சிகளுக்கு அழைப்பு இல்லை !!

June 19, 2020

இன்று மாலை 5 மணியளவில் இந்திய சீன படைகள் மோதிக்கொண்ட லடாக் பிரச்சினை பற்றி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

காஷ்மீரில் ஒரே நாளில் 8 பயங்கரவாதிகளை வீழ்த்திய பாதுகாப்பு படையினர் !!

June 19, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி 5 பயங்கரவாதிகளை கொன்றுள்ளனர். அதை போல புல்வாமா பகுதியிலும் பயங்கரவாதிகள் இருப்பதாக துப்பு கிடைத்ததை அடுத்து அப்பகுதியிலும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். இதில் 3 பயங்கரவாதிகளை கொன்றுள்ளனர். இதுகுறித்த செய்தி பதிவை ட்விட்டரில் இந்திய தரைப்படையின் வடக்கு கட்டளையகம் வெளியிட்டுள்ளது, அதில் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் இந்திய தரைப்படை, மத்திய ரிசர்வ் […]

Read More

லடாக் பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி மேலதிக பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கலாம் – ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி எச்சரிக்கை !!

June 19, 2020

ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் லடாக் எல்லை பிரச்சினையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேலும் அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய தரைப்படை, துணை ராணுவப்படைகள் மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் தொடர்ந்து வெற்றிகரமாக பயங்கரவாதிகளை ஒடுக்கி வரும் நிலையில் காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி செய்யலாம் எனவும் கூறினார். மேலும் முக்கிய பகுதிகள், சாலைகள் , சந்திப்புகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்றதாகவும் அவர் கூறினார். மேலும் எல்லை கட்டுபாட்டு […]

Read More