Day: June 17, 2020

லடாக்கில் வீரமரணமடைந்த வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது !!

June 17, 2020

2ஆவது மீடியம் ரெஜிமென்ட்: 1) நாயப் சுபேதார். சத்நாம் சிங்2) நாயப் சுபேதார். மந்தீப் சிங் 16ஆவது பட்டாலியன் பிஹார் ரெஜிமென்ட்: 3) கர்னல். பிகுமல்லா சந்தோஷ் குமார்.4) ஹவில்தார். சுனில் குமார்.5) நாயப் சுபேதார். நந்து ராம் சோரேன்6) நாயக். தீபக் சிங்7) சிப்பாய். ராஜேஷ் ஓரேன்8) சிப்பாய். சி.கே. ப்ரதான்9) சிப்பாய். குன்டன் ஓஜா10) சிப்பாய். கணேஷ் ராம்11) சிப்பாய். கணேஷ் ஹஸ்டா12) சிப்பாய். சந்தன் குமார்.13) சிப்பாய். குன்டன் குமார்14) சிப்பாய். அமன் […]

Read More

சுசூல் என்னுமிடத்தில் அதிக அளவு படைக்குவிப்பில் சீனா

June 17, 2020

பங்கோங் ஏரிக்கு வலது பக்கம் உள்ள சுசூல் என்னுமிடத்தில் சீனா இராணுவம் அதிக அளவு தனது படைப் பிரிவுகளை குவித்து வருவதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. மறுபுறம் சீன வெளியுறவு அமைச்சகம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை அழைத்து உங்கள் முன்னனி துருப்புகளை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைக்குமாறு கேட்டுள்ளது. இந்தியா தனது வீரர்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் சீனா தனது எல்லைகளை காப்பதில் உறுதியுடன் உள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்திய இராணுவத்தின் […]

Read More

இந்தியா போரை துவக்கினால் சீனா பின்வாங்காது-குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை

June 17, 2020

இந்தியப் படைகளும் சீனப்படைகளும் மோதிக்கொண்ட ஒரு நாளுக்கு பிறகு இன்று சீன மீடியாவான குளோபல் டைம்ஸ் இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் சீனா போரை விரும்பவில்லை எனினும் அப்படி ஒரு சந்தர்பம் வந்தால் சீனா ஒதுங்கி போகாது எனவும் குளோபல் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் சீனா செயல்பட்டு பிரச்சனையை குறைக்க முடிவு செய்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அகந்தை காரணமாக தான் இந்த பிரச்சனை நடந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி […]

Read More

தனது குழந்தையை பார்க்காமலேயே வீரமரணமடைந்த சிப்பாய் ஓஜா !!

June 17, 2020

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள திஹாரி கிராமத்தை சேர்ந்தவர் சிப்பாய் குன்டன் ஓஜா. 27 வயதான இவருக்கு வெறுமனே 17 நாட்கள் முன்னர் தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தனது மகளை கடைசி வரை பார்க்காமலேயே லடாக் எல்லையில் நாட்டுக்காக வீரமரணமடைந்துள்ளார். இந்த மாவீரனுக்கு எமது சல்யூட் !!

Read More

போர் விமானங்கள், முன்னனி போர்கப்பல்கள் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நகர ஆணை !!

June 17, 2020

இந்திய அரசு முப்படைகளுக்கும் போர்க்காலத்திற்கு தேவையான சப்ளைகளை கொள்முதல் செய்ய சிறப்பு அதிகாரங்களை வழங்கி உள்ளது. தற்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை போல் இனி எதுவும் நடக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைப்போல கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் முப்படைகளையும் ஒருங்கிணைத்து உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தகவல். இந்திய கடற்படை தனது முன்னனி போர்க்கப்பல்களை மலாக்கா ஜலசந்தி அருகேயும் தேவைப்பட்டால் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் எங்கு […]

Read More

சீன எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு இடையே பாக் ராணுவம் எல்லை அத்துமீறல் !!

June 17, 2020

நேற்று முன்தினம் லடாக்கில் நமது வீரர்கள் வீரமரணமடைந்ததை அறிந்து நாடே சோகத்தில் ஆழ்ந்த நேரத்தில் மாலை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. நவ்காம் செக்டாரில் மோர்ட்டார்களை கொண்டும் துப்பாக்கிகளை கொண்டும் இந்திய நிலைகளை பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்கியுள்ளனர். இந்திய ராணுவமும் இதற்கு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

Read More

இந்தியா சீனா மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள்

June 17, 2020

கலோனல் பி சந்தோஷ் பாபு ஹவில்தார் சுனில் குமார் 3.நாய்ப் சுபேதார் நந்து ராம் 4.சிபாய் சிகே பிரதான் சிபாய் ராஜேஸ் ஒரான் சிபாய் கேகே ஓஜா சிபாய் கனேஷ் ராம் 8.சிபாய் கனேஷ் ஹஸ்டா 9.சிபாய் சந்தன் குமார் நாய்க் தீபக் சிங் 11.சிபாய் அமன் குமார் சிபாய் குந்தன் குமார் நாய்ப் சுபேதார் சத்னாம் சிங் நாய்ப் சுபேதார் மந்தீப் சிங் சிபாய் ஜெய் கிஷோர் சிங் ஹவில்தார் பிபுல் ராய் சிபாய் குர்டேஜ் […]

Read More

இந்திய சீன ராணுவ சண்டையில் சீன வீரர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு மேலும் சீன ராணுவ உயர் அதிகாரி மரணம் !!

June 17, 2020

நேற்று முன்தினம் இரவு இந்திய சீன படைகள் இடையே லடாக்கின் கல்வான் நாலா பகுதியில் மோதல் நடைபெற்றது. இதில் தற்போது 60க்கும் அதிகமான சீன வீரர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சண்டையில் ஈடுபட்ட சீன படைப்பிரிவின் கட்டளை அதிகாரியும் கொல்லப்பட்டு உள்ளார் என்று சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

தனது வீரர்களின் இறப்பை மூடி மறைத்து தனது ஜாம்பவான் இமேஜை காபாற்ற முயற்சிக்கும் சீனா !!

June 17, 2020

நேற்று முன்தினம் இரவு லடாக்கில் கல்வான் நாலா பகுதியில் இந்திய சீன படைகளிடையே நடைபெற்ற மோதலில் சுமார் 1 கர்னல் உட்பட 23 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன ராணுவ வீரர்கள் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அமெரிக்க உளவுத்துறை 35க்கும் அதிகமான சீன வீரர்கள் மரணமடைந்து இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்தியாவை விட தனது வீரர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருக்க வேண்டுமென சீனா விரும்புகிறது. அதாவது தனது […]

Read More

ஹவில்தார் பழனி – நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட மாவீரன் !!

June 17, 2020

ஹவில்தார் பழனி 18 வயதிலேயே தேசப்பற்று காரணமாக இந்திய தரைப்படையில் இணைந்தார். பீஹார் ரெஜிமென்ட்டின் 16ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். பல ராணுவ வீரர்களை போலவே ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்டவர். பல ஆண்டுகளாக கனவு கண்டு ஆசையாக ஒரு வீட்டை தற்போது தான் கட்டி முடித்தார். இனி விடுமுறையில் வந்து கிரக பிரவேசம் முடித்துவிட்டு புதிய வீட்டில் குடியேற திட்டமிட்டு இருந்தார். அந்த நேரத்தில் லடாக்கில் இந்த பிரச்சினை தொடங்கியது. அவரது மனைவி வானதியிடம் வழக்கமாக […]

Read More