லடாக்கை நோக்கி விரையும் 1600 எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் பணியாளர்கள் !!

  • Tamil Defense
  • June 16, 2020
  • Comments Off on லடாக்கை நோக்கி விரையும் 1600 எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் பணியாளர்கள் !!

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சுமார் 1600 பணியாளர்கள் ரயில் மூலமாக திங்கட்கிழமை ஜம்முவை அடைந்தனர். அவர்கள் தற்போது லடாக்கை நோக்கி பயணித்து வருகின்றனர்.

ஜார்கண்ட் அரசும் எல்லையோர சாலைகள் அமைப்பும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. இதன்படி சுமார் 11ஆயிரம் பணியாளர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்திய சீன எல்லையை ஒட்டிய லடாக், ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களில் எல்லையோர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலான ஆபரேஷன் விஜயக், ஆபரேஷன் ஹிமாங்க் போன்ற திட்டங்களில் பணியாற்றுவர்.

தற்போது இந்த நடவடிக்கை இந்திய சீன எல்லையோரம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியை இந்தியா எக்காரணம் கொண்டும் நிறுத்தாது என்பதை உணர்த்துவதாக உள்ளது.