
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடற்படையின் தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்தில் பல பயிற்சி வீரர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
தற்போது இந்த மையத்தில் 16 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட 16 வீரர்களையும் ஜாம்நகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர்.
தற்போது தளம் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் பயிற்றுனர்கள், பயிற்சி வீரர்கள் ஆகியோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.