Day: June 16, 2020

இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என நேபாள பாராளுமன்றத்தில் புளுகிய நேபாள பிரதமர் கே.பி. ஒலி !!

June 16, 2020

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக்,லிம்பியாதுரா மற்றும் கலாபணி ஆகிய பகுதிகளை நேபாள நாட்டுடன் இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இதனை ஆதரிக்கும் தீர்மானத்தை நேபாள பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றவும் செய்தனர். அப்போது பேசிய நேபாள பிரதமர் கே.பி. ஒலி இந்தியா இப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என பொய் தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருநாட்டு வெளியுறவு செயலர்கள் தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் சந்தித்து பேச விருப்பம் […]

Read More

வானிலிருந்து ஏவுப்படும் பிரம்மாஸ் ஏவுகணை பயன்பாட்டிற்கு தயார் !!

June 16, 2020

கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி செமிலாக், ஏ.எஸ்.டி.இ, டி.ஆர்.டி.ஓ மற்றும் எஸ்.டி.ஐ ஆகிய நிறுவனங்கள் மற்றும் இந்திய விமானப்படையின் தலைமையகம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நடத்திய கூட்டத்தில் வான்வழி தாக்குதல் திறன் கொண்ட பிரம்மாஸ் ஏவுகணை பயன்பாட்டிற்கு தயார் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த சான்றிதழ் தேஜாஸ் விமானத்திற்கு. வழங்கப்பட்ட முதல்கட்ட செயல்பாட்டு சான்றிதழுக்கு நிகரானது. இனி கூடிய விரைவில் தேஜாஸ் விமானத்திற்கு வழங்கப்பட்ட இறுதிக்கட்ட செயல்பாட்டு சான்றிதழுக்கு நிகரான பயன்பாட்டு சான்றிதழ் வான்வழி தாக்குதல் […]

Read More

சீன வீரர்களின் உடல்களை வானூர்தி மூலம் மீட்கும் சீனா

June 16, 2020

இந்திய வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை வானூர்தி மூலமாக சீனா மீட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் தாக்குதலில் 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.பலர் காயமடைந்துள்ளனர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.மற்றும் மேலும் சில காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பதற்றம் காரணமாக ஹிமாச்சல் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

43 சீன வீரர்கள் உயிரிழப்பு-ஏஎன்ஐ செய்தி நிறுவனம்

June 16, 2020

லடாக்கில் இந்திய சீன வீரர்கள் ஆக்ரோசமாக மோதிக்கொண்டதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஆசியன் நீயூஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. சீன தொலைத்தொடர்பு சாதனங்களை இந்தியா வழிமறித்து கேட்டதில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா சார்பில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லையில் பிரச்சனை பெரிதாகி வருகிறது.

Read More

20 இராணுவ வீரர்கள் வீரமரணம்

June 16, 2020

இந்திய சீன வீரர்கள் நேற்று இரவு மோதிக்கொண்டதில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீனப்பக்கமும் இந்தியாவுடையது போலவே இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 135 இந்திய வீரர்கள் வரை காயமடைந்து லேயில் உள்ள 303 தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் அதே போல கலோனல் சந்தோஷ் அவர்கள் சீன உடனான அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்தவர் ஆவார்.கலோனல் அளவிலான கூட்டத்தில் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர். இரவு அவர் வீரமரணம் அடைந்தது நமக்கு […]

Read More

சோகச் செய்தி-நினைத்ததை விட பெரிய விசயமாக மாறும் சீன விவகாரம்

June 16, 2020

இனி சீன சண்டை சாதாரண சண்டையாக மட்டும் இருக்க போவதில்லை..போராக மாற அனைத்து சாதகமும் ஏற்பட்டுள்ளது. 20 இந்திய வீரர்கள் வரை வீரமரணம் அடைந்திருக்கலாம் என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.அதில் மூன்று வீரர்களுக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல். 45 வீரர்களை வரை சீனாவிடம் சிக்கி பின்னர் 25 வீரர்கள் வரை விடுவிக்கப்பட்டுள்ளனர். 135 இந்திய வீரர்கள் வரை காயமடைந்து லேயில் உள்ள 303 தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் இவை இராணுவத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை […]

Read More

36 இந்திய வீரர்களை காணவில்லை என தகவல்

June 16, 2020

லடாக்கில் நடைபெற்ற சண்டைக்கு பிறகு 36 இந்திய வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காணமல் போல சில வீரர்கள் இந்தியா திரும்பியிருந்தாலும் ஒரு மேஜர் மற்றும் ஒரு கேப்டன் இன்னும் காணவில்லை.அவர்கள் சீன கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம் இந்தியா பக்கம் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. நேற்று சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் கமாண்டிங் அதிகாரி ஒருவர் மற்றும் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.துப்பாக்கியால் இரு நாட்டு வீரர்களும் தாக்கப்படவில்லை என்றும் […]

Read More

பிரதமர் மோடியுடன் அவசர சந்திப்பு: நிலைமையை விளக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

June 16, 2020

நேற்று கல்வான் நாலா பகுதியில் இந்திய சீன படைகளிடையே நடைபெற்ற மோதலில் நமது தரைப்படையின் கர்னல் பிகுமல்லா சந்தோஷ் குமார், ஹவில்தார். பழனி மற்றும் இன்னோரு வீரர் ஆகியோர் வீரமரணமடைந்தனர். வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபு இந்திய ராணுவ பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மோதலில் 5 சீன வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து இன்று பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கல்வான் பகுதியில் […]

Read More

இந்திய பக்கம் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்

June 16, 2020

நேற்று சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் கமாண்டிங் அதிகாரி ஒருவர் மற்றும் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.துப்பாக்கியால் இரு நாட்டு வீரர்களும் தாக்கப்படவில்லை என்றும் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டனர் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் சீனப் பக்கம் கிட்டத்தட்ட ஐந்து வீரர்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கம்யூனிச நாடாக சீனா தனது உயிரிழப்புகளை என்றும் வெளியிடாது. எனினும் தற்போது வெளியிட்ட தகவல்படி இந்திய வீரர்கள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Read More

ஐந்து சீன வீரர்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல்

June 16, 2020

நேற்று சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் கமாண்டிங் அதிகாரி ஒருவர் மற்றும் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.துப்பாக்கியால் இரு நாட்டு வீரர்களும் தாக்கப்படவில்லை என்றும் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டனர் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் சீனப் பக்கம் கிட்டத்தட்ட ஐந்து வீரர்கள் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கம்யூனிச நாடாக சீனா தனது உயிரிழப்புகளை என்றும் வெளியிடாது என்று கூறப்படுவதுண்டு. இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத்துறை தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும் இந்தியா தன்னிச்சையாக எந்த […]

Read More