Day: June 14, 2020

சீன ஆக்கிரமிப்பை முறியடிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும் !!

June 14, 2020

அமெரிக்க வெளியுறவு துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா பகுதி பிரிவுக்கான முதன்மை துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் ஆவார். இவர் கடந்த புதன்கிழமை நிருபர்களிடையே பேசிய போது சீனாவின் அத்துமீறலை முறியடிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என கூறியுள்ளார். சீனாவின் ஆதிக்க நடவடிக்கைகளை எதிர்த்து பல நாடுகள் ஒரணியில் திரண்டு வருவதாகவும் அவர் கூறினார். சீன எல்லையில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீன படைகளின் நடவடிக்கையில் இருந்து இந்தியா தனது இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா உதவும் […]

Read More

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டருக்கான முதல் ஒப்பந்தம் விரைவில் !!

June 14, 2020

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இலகுரக தாக்குதல் ஹெலிகாப்ருக்கான முதல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் மாதவன் கூறுகையில் ” விலை பற்றிய பேச்சுவார்த்தை முடிவுற்றுள்ளது. தற்போது ஒப்பந்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். இந்த வருட இறுதிக்குள் 15 ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தம் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கூடுதலாக 150 ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே 5 ஹெலிகாப்டர்களின் கட்டுமானம் நடைபெற்று வருகிறது இது விரைவில் […]

Read More

பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் 4ஆவது ஏவாக்ஸ் விமானத்தை பெற்றுள்ள பாக் விமானப்படை !!

June 14, 2020

கடந்த மாதம் பாகிஸ்தான் விமானப்படை சாப்2000 ஏவாக்ஸ் விமானம் ஒன்றை பெற்றுள்ளது. இது பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் பெறும் 4ஆவது ஏவாக்ஸ் விமானமாகும். தற்போது பாகிஸ்தான் விமானப்படையில் ஏழு சாப்2000 மற்றும் நான்கு சீன ஷாங்ஸி இசட்.டி.கே 03 என மொத்தமாக 11 ஏவாக்ஸ் விமானங்கள் உள்ளன. மறுபக்கம் இந்திய விமானப்படையிடம் இரண்டு நேத்ரா மற்றும் மூன்று ஃபால்கன் ஏவாக்ஸ் என மொத்தமாக 5 ஏவாக்ஸ் விமானங்கள் உள்ளன. இந்திய விமானப்படை மேலதிகமாக 24 நேத்ரா […]

Read More

முடிவுக்கு வரும் அமெதி துப்பாக்கி தொழிற்சாலை சிக்கல், இந்திய ராணுவத்திற்கு புதிய துப்பாக்கிகள் !!

June 14, 2020

இந்திய ராணுவத்திற்கு 4300 கோடி ருபாய் செலவில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் ஏகே203 துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. ரஷ்யா உடனான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்த துப்பாக்கி தொழிற்சால் அமைக்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் மற்றும் இந்திய ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் ஆகியவை இடையே சரியான விலையை நிர்ணயம் செய்வதில் நிலவும் குழப்பம் காரணமாக இத்திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து […]

Read More

பாக் தாக்குதலில் மீண்டும் இராணுவ வீரர் வீரமரணம்,இரு வீரர்கள் காயம்

June 14, 2020

பாக் இராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர். காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கிர்னி செக்டார்களில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்திய இராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல்களில் பத்து பாக் இராணுவ நிலைகள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்த பெண் உளவாளி !!

June 14, 2020

மேற்கு வங்க மாநிலம் வங்காளதேச எல்லையோரம் அமைந்துள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மெளலானா ஆசாத் அரசு கல்லூரியின் மாணவி ஆவார். கைது செய்யப்பட்ட தானியா பர்வீன் பாகிஸ்தானில் உள்ள பலருடன் தொடர்பில் இருந்துள்ளார் அவர்களில் ஹஃபீஸ் சயீத்தும் ஒருவர் ஆவார். இந்த பெண் உளவாளியை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஹனி ட்ராப் முலமாக பல அதிகாரிகளிடம் முக்கிய தகவல்களை […]

Read More

இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் இந்தியாவின் செல்வாக்கு; இந்திய-ஃபிலிப்பைன்ஸ் நட்பு !!

June 14, 2020

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுவடர்டெ அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரு தலைவர்களும் கொரோனா ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த உறவுகள் பற்றி விவாதித்து கொண்டுள்ளனர். அப்போது இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது பங்களிப்பை அதிகபடுத்த வேண்டும் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் கேட்டு கொண்டதாக தெரிகிறது. இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் இடையே கடந்த சில வருடங்களாக பாதுகாப்பு துறை சாரந்த நெருக்கம் அதிகரித்து வருவது […]

Read More

ஃபிலப்பைன்ஸ் கடற்படை கப்பலை சரி செய்ததற்கும், ஃபிலப்பைன்ஸ் கடற்படை வீரர்களை கவனித்து கொண்டதற்கும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த ஃபிலப்பைன்ஸ் !!

June 14, 2020

ஃபிலப்பைன்ஸ் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜியோவான்னி கார்லோ இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தங்களது நாட்டு கடற்படை கப்பலில் ஏற்பட்ட விபத்தின் போது தக்க சமயத்தில் உதவி கப்பலை இலவசமாக சரி செய்து தந்ததோடு மட்டுமில்லாமல் காயமடைந்த வீரர்களை இன்றளவு வரை கவனித்து வருவதற்காக நன்றி தெரிவித்துள்ளார் மேலும் இந்திய கடற்படை மற்றும் ஃபிலப்பைன்ஸ் கடற்படை இடையேயான உறவு பலபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஃபிலப்பைன்ஸ் ராணுவத்தின் கூட்டுபடை தலைமை தளபதி […]

Read More