சமீபத்தில் இந்தியாவின் சில பகுதிகளை இணைத்து நேபாளம் வரைபடம் ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து வரலாற்றில் முதல்முறையாக நமது உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் உள்ள 15 நிலைகளுக்கு நேபாளம் ஆயுதம் ஏந்திய படையினரை அனுப்பியுள்ளது. முன்னர் நேபாள காவல்துறையினர் இந்த நிலைகளை நிர்வகித்து வந்த நிலையில் இந்த மாற்றம் பதட்டத்தை அதிகரித்து உள்ளது. அதிலும் முன்பிருந்ததை விட (6) சங்கார்ரு மற்றும் ஜூலாகாட் ஆகிய நிலைகளில் அதிகமான வீரர்கள் (20) தற்போது நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது […]
Read Moreசீன எல்லையோரம் நிலைமை கட்டுபாட்டில் உள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். முதலில் கோர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது, தற்போது கள முன்னனியில் உள்ள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆகவே யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே டேராடூனில் அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழாவில் நிருமர்களிடம் தெரிவித்தார்.
Read Moreடேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி தரைப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பயிற்சி மையம் இன்று உலகின் மிகச்சிறந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. இன்று 143வது ரெகுலர் மற்றும் 129ஆவது டெக்னிக்கல் பிரிவுகளின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. வழக்கமாக பெற்றோர் உறவினர்கள் புடைசூழ பதவி ஏற்கும் இளம் அதிகாரிகள் இம்முறை கொரோனா காரணமாக தங்கள் வாழ்வின் பொன்னான தருணத்தில் யாருமின்றி பதவி ஏற்று கொண்டனர். இதுவரை […]
Read Moreகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியது. இதனையடுத்து படிப்படியாக அவை திறக்கப்பட்டாலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. அந்த வகையில் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தங்களை பெற்ற பல உள்நாட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சரியான காலநேரத்திற்குள் டெலிவரி செய்ய முடியாமல் தவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சகம் கூடுதலாக 4 மாத கால அவகாச நீட்டிப்பு செய்துள்ளது. இது உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றில் […]
Read Moreஅருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்திற்கு பீஹார் மாநிலத்தில் இருந்து பணிக்கு திரும்பிய மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ராணுவ மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர.மேற்குறிப்பிட்ட மூவரில் ஒருவர் ராணுவ மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreகுஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடற்படையின் தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்தில் பல பயிற்சி வீரர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். தற்போது இந்த மையத்தில் 16 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட 16 வீரர்களையும் ஜாம்நகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர். தற்போது தளம் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் பயிற்றுனர்கள், பயிற்சி வீரர்கள் ஆகியோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Read Moreவைஸ் அட்மிரல் பிஸ்வஜீத் தாஸ்குப்தா இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல். பிஸ்வஜீத் தாஸ்குப்தா வெள்ளிக்கிழமை பதவி ஏற்று கொண்டார்.. இதற்கு முன்னர் வைஸ் அட்மிரல் கோர்மடே இப்பதவியை நிர்வகித்து வந்தார். இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றவர் ஆவார். தனது பணிக்காலத்தில் ஐ.என்.எஸ். விராட், ஐ.என்.எஸ். தபார், ஐ.என்.எஸ். கார்முக் உள்ளிட்ட பல முன்னணி போர்க்கப்பல்களை வழிநடத்தி உள்ளார். மேலும் மேற்கு கட்டளையகத்தின் நடவடிக்கைகள் பிரிவிவை நிர்வகித்து வந்தார். இதைத்தவிர ஊட்டி […]
Read Moreகாஷ்மீரின் குல்கமில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.சனியன்று நடைபெற்ற இந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர். குல்கம் மாவட்டத்தின் நிபோரா பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக காஷ்மீர் காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது தவிர அனந்தநாக்கில் நடைபெற்று வரும் மற்றொரு என்கௌன்டரில் மேலும் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். லல்லான் ஏரியாவில் இந்த சண்டை நடைபெற்று வருகிறது. இன்று மட்டும் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read Moreகாஷ்மீரின் குல்கமில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.சனியன்று நடைபெற்ற இந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர். குல்கம் மாவட்டத்தின் நிபோரா பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக காஷ்மீர் காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Read More