Day: June 11, 2020

அமெரிக்காவிற்கு அருகாமையில் பறந்த ரஷ்ய விமானப்படை விமானங்களை திரும்ப அனுப்பிய அமெரிக்க விமானப்படை !!

June 11, 2020

அமெரிக்க விமானப்படையின் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டளையகம் அமெரிக்க எல்லைக்கு அருகே பறந்த ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்து திரும்ப அனுப்பியுள்ளது. புதன்கிழமை அன்று அலாஸ்காவுக்கு மிக அருகே அதாவது 20நாட்டிகல் மைல் தொலைவில் 2 டியு90 குண்டுவீச்சு விமானங்களும், 2 சு35 விமானங்களும், 1 ஏ50 ஏவாக்ஸ் விமானமும் இடைமறிக்கப்பட்டுள்ளன. அதே நாளில் அலாஸ்காவுக்கு 32 நாட்டிகல் மைல்கள் தொலைவில் பறந்து கொண்டிருந்த இரண்டு டியு90 குண்டுவீச்சு விமானங்களும், ஒரு ஏ50 ஏவாக்ஸ் விமானமும் […]

Read More

உத்தராகண்ட் மாநிலத்தில் சீன எல்லை அருகே புதிய விமான தளம் திறப்பு !!

June 11, 2020

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டம் சின்யாலிசார் பகுதியில் ஒரு விமான தளம் உள்ளது. இந்த தளத்தில் முதன் முதலாக இந்திய விமானப்படையின் ஏ.என்32 போக்குவரத்து விமானம் தரை இறங்கி திரும்ப புறப்பட்டுள்ளது. இது குறித்து உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் கூறுகையில் இந்திய விமானப்படை இதுகுறித்து முறையான தகவல் அளித்த பின்பு தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறினார். இந்த சின்யாலிசார் பகுதி சீன எல்லையில் இருந்து 125கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

பலூச்சிஸ்தானில் தீவிர போராட்டம் காவல்சாவடிகளை விட்டு தலைதெறிக்க ஒடிய பாக் படையினர் !!

June 11, 2020

பலூச்சிஸ்தானில் 4 வயது சிறுவன் ஒருவனை அவனது தாயுடன் சேர்த்து சில அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். இதன் பின்னால் பாக் ராணுவம் இருப்பதாக பலூச்சிஸ்தான் மக்கள் நம்புகின்றனர். இதனையடுத்து நீதி கேட்டு பராபாச் நகரில் தீவிர போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டக்காரர்கள் பாக் பாதுகாப்பு படையினரின் காவல் சாவடிகள் மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனையடுத்து பாக் படையினர் தலை தெறிக்க ஒடியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பலூச்சிஸ்தான் மாகாணத்தில் கடத்தல்கள், கொலைகள் போன்றவை […]

Read More

சிக்கீமில் சீனா புதிய பிரச்சினையை கிளப்பலாம் – பாதுகாப்பு வல்லுநர்கள் ஐயம் !!

June 11, 2020

கடந்த மே9 ஆம் தேதி சிக்கீம் மாநிலத்தில் உள்ள நாகுலா பகுதியில் சீன படையினர் அத்துமீறியதில் இந்திய மற்றும் சீன படையினர் மோதிக்கொண்டனர். இது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் அப்போது பதிவிட்டு இருந்தோம். தற்போது இப்பிரச்சினை குறித்து ஆய்ந்த சில பாதுகாப்பு வல்லுநர்கள் இந்தியா மற்றும் சீனா இடையை பிரச்சினை இல்லாத சிக்கீமில் ஏன் சீன படையினர் மோதலில் ஈடுபட வேண்டும் எனும் கேள்விக்கு ஒரு விளக்கத்தை முன்வைக்கின்றனர். கடந்த 2003ஆம் ஆண்டு சீன பிரதமர் […]

Read More

காஷ்மீரில் லஷ்கர் இயக்கத்தின் ஹவாலா மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுவினர் மிகப்பெரிய அளவில் போதை மருந்துகளுடன் கைது !!

June 11, 2020

காஷ்மீரின் ஹன்ட்வாரா பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூவர் மிகப்பெரிய அளவில் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களாவன;1) இஃப்திகார் இந்த்ராபி (முக்கிய குற்றவாளி, ஏற்கனவே பல போதைப்பொருள் தொடர்பான இவன் மீது பதியபட்டுள்ளது)2) மொமீன் பீர் (முதன்மை குற்றவாளியின் மருமகன்)3) இக்பால் அல் இஸ்லாம். இவர்கள் மூவருமே லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகளின் செலவுக்காக போதைப்பொருளை கடத்தி விற்று அதில் வரும் பணத்தை ஹவாலா வழியாக அந்த இயக்கத்துக்கு […]

Read More

விக்ராந்த் கப்பலில் கருவிகள் திருடு போன வழக்கில் இருவர் கைது !!

June 11, 2020

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொச்சியில் கட்டப்ட்டு வரும் ஐ.என.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் இருந்து முக்கியமான கணிணிகள், ஹார்ட் டிஸ்குகள் ஆகியவை திருடு போயின. இந்த நிகழ்வு அப்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள காவல்துறை விசாரித்து வந்த வழக்கை பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பு எடுத்துக்கொண்டது. பல ஆயிரம் பேரின் கைரேகைகள் எடுத்துக்கொள்ளப்ட்ட போதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கப்பலில் பெயின்டர்களாக பணியாற்றி வந்த 23வயது கொண்ட சுமித் குமார் சிங் (முந்தெர்- பிஹார்) […]

Read More

இந்தோ திபெத் காவல்படையின் புதிய மேற்கு கட்டளையகம் !!

June 11, 2020

இந்தோ திபெத் எல்லை காவல்படை புதிதாக மேற்கு கட்டளையகத்தை உருவாக்கி உள்ளது. இந்த மேற்கு கட்டளையகமானது லடாக், ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சீன எல்லை பகுதியை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். இதன் தலைமையகம் சண்டீகர் நகரில் அமைந்துள்ளது. இந்த புதிய மேற்கு கட்டளையகத்தின் தலைமை அதிகாரியாக ஏ.டி.ஜி. மனோஜ் சிங் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தில்லியில் உள்ள இந்தோ திபெத் எல்லை காவல்படையின் தலைமையகத்தில் நடவடிக்கைகள் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக உள்ளார்.

Read More

எல்லையில் பாக் இராணுவம் கடும் தாக்குதல்-ஒரு இராணுவ வீரர் வீரமரணம்

June 11, 2020

காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் பாக் படைகள் நடத்திய மோர்ட்டார் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.பொதுமக்களுள் ஒருவரும் காயமடைந்துள்ளனர். ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.தர்குந்தி செக்டாரில் நடைபெற்ற தாக்குதலில் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். காயமடைந்த நயமத்துல்லா என்பவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Read More