Day: June 10, 2020

சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு இருக்கும் பலம் !!

June 10, 2020

அமெரிக்காவில் உள்ள பெல்ஃபேர் அறிவியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் கல்லூரி சமீபத்தில் இந்திய மற்றும் சீன ராணுவ பலம் குறித்த ஒரு ஆய்வறிக்கை ஒன்றினை சமர்பித்துள்ளது.இதில்பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட சில அரசு தரவுகள், பாதுகாப்பு நிபுணர்களின் ஆய்வுக்கட்டுரைகள், சீன, இந்திய மற்றும் அமெரிக்க வல்லுனர்களின் பேட்டிகள் போன்றவை ஆய்வுக்கட்டுரையின் ஆதாரங்கள் ஆகும். இதனை தயாரித்தவர்கள் டாக்டர் ஃப்ராங்க் ஒ டான்னல் (ஸ்டிம்சன்ஸ் மையம்) மற்றும் அலெக்ஸாண்டர் கே போல்ஃப்ராஸ் (ஸ்விஸ் ஃபெடரல் கல்லூரியில் மூத்த ஆய்வறிஞர்) ஆகியோர் […]

Read More

ஒரு மனதாக புதிய வரைபடத்தை அங்கீகரித்துள்ள நேபாள நாடாளுமன்றம் !!

June 10, 2020

இந்தியாவின் கலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா போன்ற பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து வெளியிட்டுள்ள வரைபடத்தை இன்று நேபாள நாடாளுமன்றம் ஒரு மனதாக அங்கீகரித்துள்ளது. இதுகுறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ப்ரதீப் க்யாவாலி கூறுகையில் இந்த நடவடிக்கை பிரச்சினையாக மாறுவதை விரும்பவில்லை மாறாக இதனை பேச்சுவார்த்தை மூலமாக சுமுகமான முறையில் முடித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றுள்ளார். பிரதான எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி இந்த செயலுக்கு நேபாள பிரதமர் மற்றும் நேபாள அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

Read More

பாகிஸ்தான் மீதான தனது பிடியை இறுக்கும் பாக் ராணுவம் – மீண்டும் ராணுவ ஆட்சியா ??

June 10, 2020

பாகிஸ்தானில் அதிகரித்துள்ள ஊழல், பொருளாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவை பிரதமர் இம்ரான் கான் மீதான அதிருப்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளது . தற்போது இந்த சூழலை பாக் ராணுவம் பயன்படுத்தி கொண்டு மீண்டும் பாகிஸ்தான் மீதான தனது பிடியை வலிமைபடுத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு காரணமாக அரசின் உயர் பொறுப்புகளில் ஒய்வுப்பெற்ற மற்றும் பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவது சுட்டு காட்டப்படுகிறது. பாகிஸ்தான் தேசிய ஏர்லைன்ஸ், மின்சார துறை நிறுவனம், தேசிய சுகாதார கல்லூரி […]

Read More

உட்பகுதிகளில் 10000 வீரர்களை குவித்துள்ள சீன ராணுவம் !!

June 10, 2020

இந்திய சீன எல்லை பிரச்சினை நிகழ்ந்து வரும் நான்கு பகுதிகளில் இருந்து இருதரப்பும் கணிசமான அளவில் படைகளை திரும்ப பெற்ற நிலையில் தற்போது சீனா உட்பகுதிகளில் வீரர்களை குவித்துள்ளது. 10,000 வீரர்கள், பிரங்கிகள், டாங்கிகள், போர் விமானங்கள் உட்பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது கவனத்தில் எடுத்துகாகொள்ளப்பட்டு உள்ளது எற மத்திய அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்து நடைபெறவிருக்கும் மேஜர் ஜெனரல் மட்டத்திலான இந்திய சீன ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் இந்தியா இப்பிரச்சினையை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த, மிகப்பெரிய மலையக போர்ப்படை இந்தியாவுடையது – சீன பாதுகாப்பு வல்லுனர் எதிரி நாட்டு நிபுணரே இந்திய ராணுவத்தை புகழ்ந்து எழுதிய கட்டுரை !!

June 10, 2020

சீனாவில் இருந்து வெளிவரும் “மாடர்ன் வெப்பன்ரி” மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர் ஹூவாங் குவோசி. இந்த இதழ் சீன ராணுவத்தின் பிரதான ஆயுத சப்ளையரான நோரின்கோ நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும். இவர் சமீபத்தில் தி பேப்பர் எனும் பத்திரிக்கையில் “உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த மிகப்பெரிய மலையக போர்ப்படை இந்தியாவினுடையது மேலும் மலைப்பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு இந்திய வீரரும் மலையக போர்ப்பயிற்சியில் நன்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் உலகின் மிகுந்த அனுபவம் மிக்க […]

Read More

அதிரடி இராணுவம்- இன்று 5, இந்த வாரத்தில் மட்டும் 14 பயங்கரவாதிகள் காலி

June 10, 2020

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சுகூ ஹெந்தாமா பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். காவல் துறை,44வது RR மற்றும் சிஆர்பிஎப் வீீரர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை அடைந்த போது பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் பின் நடந்த என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் மட்டும் 14 பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

Read More

இந்திய விமானப்படை தாக்குதல் என பதறி கராச்சி நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு – பாலகோட் தாக்குதல் விளைவு !!

June 10, 2020

செவ்வாய்க்கிழமை அன்று பின்இரவு நேரத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எல்லை தாண்டி வந்து விட்டதாகவும், மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் பாகிஸ்தானின் கராச்சி நகர மக்கள் பதறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அப்பதிவுகளில் சிலர் இந்தியாவை சாடியும், சிலர் அச்சத்திலும் பதட்டத்திலும், சிலர் பாக் விமானப்படை விமானங்கள் பறக்கும் வீடியோக்களை இந்திய விமானப்படை விமானங்கள் என்றும் பதிவிட்டுள்ளனர். ஆனால் இந்திய விமானப்படை இத்தகயை செய்திகளை மறுத்துள்ளது, பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை அவர்கள் தவறாக இந்திய விமானப்படை விமானங்கள் […]

Read More

காஷ்மீரில் என்கௌன்டர்-மூன்று பயங்கரவாதிகள் காலி

June 10, 2020

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சுகூ ஹெந்தாமா பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். காவல் துறை,44வது RR மற்றும் சிஆர்பிஎப் வீீரர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை அடைந்த போது பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் பின் நடந்த என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

Read More

மலைசார் போர்முறையில் இந்தியாவே சிறந்தது-சீன இராணுவ வல்லுநர் கருத்து

June 10, 2020

இந்தியாவிடம் பெரிய , அனுபவம் வாய்ந்த மலைசார் போர்முறையில் சிறந்த படைப் பிரிவு உள்ளதாக சீன இராணுவ வல்லுநர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இரஷ்யாவும் அல்ல அமெரிக்காவும் அல்ல இந்தியாவே சிறந்த படை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அதிஉயர் பகுதிகளில் போரிடும் அனுபவம் இந்திய வீரர்களுக்கு உள்ளதாக கூறியுள்ளார். இந்தியா சீனப் படைகள் எல்லையில் மோதி வரும் நிலையில் இந்த கருத்துவெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. மலைப் பிரிவு போரிடும் படைக்கு இந்தியா அனைத்துவித பயிற்சிகளையும் அளித்துள்ளதாக அவர் […]

Read More

காஷ்மீரில் மீண்டும் என்கௌன்டர்-இரு பயங்கரவாதிகள் காலி

June 10, 2020

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சுகூ ஹெந்தாமா பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். காவல் துறை,44வது RR மற்றும் சிஆர்பிஎப் வீீரர்கள் நடத்திய தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை அடைந்த போது பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் பின் நடந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

Read More