Day: June 9, 2020

காஷ்மீர் மீது படையெடுக்க முன்னாள் பாக் தூதரக அதிகாரி அறைகூவல் விடுப்பு !!

June 9, 2020

தில்லியில் பாக் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் பாக் தூதரக அதிகாரியான அப்துல் பாசித் சீனாவுடன் இணைந்து இருமுனை போர் தொடுத்து காஷ்மீரை மீட்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளான். மேலும் அப்துல் பாசித் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், பாக் தரப்பு ராஜாங்க ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவியதாகவும், ஆகவே தற்போது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சீன போரின் போது பாகிஸ்தானுக்கு […]

Read More

இந்தோ திபெத் காவல்படைக்கு காலநிலை கட்டுபாட்டு வசதி கொண்ட காவல்சாவடி லடாக்கில் அமைப்பு !!

June 9, 2020

லடாக்கில் பாங்காங் ஸோ ஏரி அருகே உள்ள லுகுங் பகுதியில் இந்தோ திபெத் காவல்படைக்கு நவீன காலநிலை கட்டுபாட்டு வசதி கொண்ட காவல்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் சாவடி வழக்கமாக டீசல் அல்லது மண்ணெண்ணெய் கொண்டு செயல்படாமல் சூரிய சக்தி மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வெளியே -40டிகிர காலநிலை இருந்தாலும் இந்த காவல்சாவடிக்கு உள்ளே 22-28 டிகிரி காலநிலை நிலவும் வகையில் இது கட்டமைக்க பட்டுள்ளது.மேலும் லடாக்கில் உள்ள காரகோரம் பகுதி முதல் அருணாச்சல […]

Read More

370ஆவது சட்டப்பிரிவு ரத்து; பாஸிட்டிவ் ஆக எடுத்துக்கொண்ட காஷ்மீர் மக்கள் – விரக்தியில் பாகிஸ்தான் !!

June 9, 2020

நேற்று ஷோபியான் என்கவுன்டருக்கு பிறகு அவந்திபோராவில் செய்தியாளர்களை 15ஆவது கோர் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ராஜூ சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் “370ஆவது சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மகாகள் பாஸிட்டிவ் ஆக எடுத்து கொண்டுள்ளனர், கடந்த காலங்களை விட தற்போது அதிகப்படியான அமைதி நிலவி வருவதே இதற்கு சாட்சி என்றார். மேலும் கூறுகையில் படிப்படியாக காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா துவங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். […]

Read More

சீன ராணுவ தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு !!

June 9, 2020

லடாக்கில் தற்போது பிரச்சினை நிலவி வரும் 4 பகுதிகளிலும் நிலைமை அப்படியே உள்ளதாகவும் இருதரப்பு படையினரும் அப்படியே உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரச்சனை நிலவும் பகுதியில் இருந்து 400கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள கஷ்கர் நகரில் அமைந்துள்ள ஸின்ஜியாங் ராணுவ மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை அன்று இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் இடையே 7 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை […]

Read More

உள்நாட்டிலேயே போர் விமான என்ஜின் தயாரிக்க அதிகரித்து வரும் கோரிக்கைகள் !!

June 9, 2020

இந்தியா தற்போது சொந்தமாக நான்காவது போர் விமான திட்டத்திற்கும் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே ஒரு போர் விமான என்ஜினை தயாரிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதற்கு காரணம் இந்தியாவின் தேஜாஸ் மார்க்1ஏ, தேஜாஸ் மார்க்2, கடற்படைக்கான் டெட்பெஃப் மற்றும் ஆம்கா ஆகிய விமானங்களில் அமெரிக்க ஜி.இ என்ஜின்கள் பயன்படுத்தப்படும். இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு தோராயமாக 300க்கும் அதிகமான என்ஜின்கள் தேவை, ஏறத்தாழ […]

Read More

செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வரும் ஏர் இந்தியா ஒன் ; ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பயன்படுத்தப் போகும் விமானம் !!

June 9, 2020

நம் நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தங்களது பயணங்களுக்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்திடம் இருந்து இரண்டு பி777 விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்கள் பின்னர் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள போயிங் மையத்திற்கு மறு கட்டமைப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பின்னர் இந்த மாதம் வர வேண்டிய விமானம் கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ளது. இந்த […]

Read More

பேச்சுவார்த்தை தோல்விக்கு பின்னர் எல்லை அருகே அதிகரித்துள்ள சீன ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் !!

June 9, 2020

கடந்த பல நாட்களாக இந்திய மற்றும் சீன ராணுவங்கள் இடையே லடாக்கில் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து எல்லையோரம் தற்போது சீன ராணுவ ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் சீன ரிணுவ படையினரை குவிக்கவும், சப்ளை பொருட்களை கொண்டு சேர்க்கவும், இந்திய படைகளை கண்காணிக்கவும் சீனாவுக்கு உதவியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பல நாட்கள் முன்னதாக சீன போர்விமானங்கள் எல்லை அருகே […]

Read More

இந்திய விமானப்படைக்கு 29 புதிய நேத்ரா ஏவாக்ஸ் விமானங்கள் !!

June 9, 2020

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் 5 போர்களில் மோதியுள்ளது இதை தவிர இரு நாடுகளுடன் சிறிய அளவிலான போர்களிலும் சண்டையிட்டுள்ளது. தற்போது மற்றுமொரு போரை இந்தியா எதிர்நோக்கி உள்ளது. அது ஒற்றை முனை அல்லது இருமுனை போராகவும் இருக்கலாம். அதற்கான தகுதிகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிதாக 29 புதிய நேத்ரா ஏவாக்ஸ் விமானங்களை வாங்கும் முடிவில் இந்திய விமானப்படை உள்ளது. ஏவாக்ஸ் விமானங்கள் […]

Read More

இந்திய-சீன மோதல் : இரு புதிய சாலைகளை சீன எல்லைக்கு அருகே அமைக்கும் இந்தியா

June 9, 2020

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா தற்போது புதிய இரு சாலைகளை அமைத்து வருகிறது.சப் செக்டார் நார்த் பகுதி என இராணுவம் அழைக்கும் பகுதியை இணைக்க முக்கியத்துவம் வாய்ந்த இரு சாலைகளை இந்தியா தற்போது அமைத்து வருகிறது. தௌலத் பெக் ஓல்டி என்ற வெளிப்புற தூர நிலையை இணைக்க டர்பக்-ஸ்யோக்-தௌலத் பெக் ஓல்டி என்ற சாலைைா இந்தியா அமைத்துள்ளது.அதே போல தற்போது இரண்டாவது முக்கியத்துவம் கொண்ட சாலையை அமைத்து வருகிறது.காரகோரம் பாஸ் வழியாக செல்லும் இந்த இரண்டாவது சாலை […]

Read More

80 பயங்கரவாதிகள் காலி,240 பேர் கைது- அதிரடி காட்டிய இராணுவம்

June 9, 2020

இந்த வருடம் மட்டும் காஷ்மீரில் 80 பயங்கயவாதிகளை இராணுவம் வீழ்த்தியுள்ளது.240 பயங்கரவாத உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார். மக்கள் துணையுடன் 22 முக்கிய பயங்கரவாதியையும் இராணுவம் வீழ்த்தியுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.கடந்த இரு வாரத்தில் மட்டுமே 22 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இராணுவம்,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல் துறை இணைந்து காஷ்மீரில் அமைதியான சூழலை ஏற்படுத்த உழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மூலச்சலவை செய்யப்பட்டு […]

Read More