Day: June 7, 2020

கிடப்பில் உள்ள ஏவுகணை சோதனைகளை நடத்தவுள்ள DRDO !!

June 7, 2020

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல பாதுகாப்பு துறை நடவடிக்கைகளும் முடங்கின. இதன் ஒரு பகுதியாக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு பல முக்கிய ஏவுகணை சோதனைகளை கிடப்பில் போட்டது. தற்போது அனைத்தும் ஏறத்தாழ இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட சூழலில் மழைக்காலம் முடிந்ததும் கிடப்பில் உள்ள ஏவுகணை சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் வரம்பு அதிகரிக்கப்பட்ட பிரம்மாஸ் மற்றும் இடைதூர வான் இலக்கு ஏவுகணைகள் இதில் முக்கியமானவை […]

Read More

சோபியானில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

June 7, 2020

யூனியன் பிரதேசமான காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். பயங்கரவாதிகள் இருப்பிடம் குறித்து இராணுவ வீரர்களுக்கு இரகசிய தகவல்கள் வெளியானதை அடுத்து இராணுவ வீரர்கள் இந்த பகுதியை சுற்றி வளைத்தனர். என்கௌன்டர் தொடங்கிய சில நேரத்திலேயே ஒரு பயங்கரவாதிகளை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். தற்போது வரை ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் 1வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,178வது பட்டாலியன் சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை SOG வீரர்கள் […]

Read More

சோபியானில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

June 7, 2020

யூனியன் பிரதேசமான காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். பயங்கரவாதிகள் இருப்பிடம் குறித்து இராணுவ வீரர்களுக்கு இரகசிய தகவல்கள் வெளியானதை அடுத்து இராணுவ வீரர்கள் இந்த பகுதியை சுற்றி வளைத்தனர். என்கௌன்டர் தொடங்கிய சில நேரத்திலேயே ஒரு பயங்கரவாதிகளை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். தற்போது வரை நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More

தவ்லத் பெக் ஒல்டி தளம் இந்திய அரசுக்கே தெரியாமல் செயல்பாட்டுக்கு வந்தது எப்படி ?? முன்னாள் மேற்கு கட்டளையக விமானப்படை தளபதியின் விளக்கம் !!

June 7, 2020

கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் தளபதியாக இருந்தவர் ஏர் மார்ஷல் பிரனாப் குமார் பார்போரா (ஒய்வு). இவரது பணிக்காலத்தில் தவ்லத் பெக் ஒல்டி தளம் எப்படி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை விளக்கும் பதிவு. கடந்த 2008ஆம் ஆண்டு நான் விமானப்படையின் மேற்கு கட்டளையக தளபதியாக பொறுப்பேற்று கொண்டேன். இதன் அதிகார எல்லை லடாக் முதல் ராஜஸ்தான் வரை உள்ளது. எனது கீழ் 60 விமானப்படை தளங்கள் இருந்தன. சீன எல்லையை ஒட்டியுள்ள […]

Read More

இந்திய பகுதிகளை இணைத்துள்ள நேபாள நாட்டு வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவுள்ள நேபாள நாடாளுமன்றம் !!

June 7, 2020

வருகிற ஜூன் 9ஆம் தேதி நேபாள பாராளுமன்றத்தில் இந்தியாவின் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய வரைபடத்தை அங்கீகரிக்கும் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நமது உத்தராகண்ட மாநிலத்தின் கலாபணி மாவட்டத்தை தனது பகுதி என கூறி வரும் நேபாளம் இந்த பகுதியை புதிய வரைபடத்தில் தனது பகுதியாக காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சட்டதிருத்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் நேபாள பிரதமர் கே.பி.ஒலி மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் !!

June 7, 2020

நேற்று இரவு பாகிஸ்தான் படைகள் ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் கத்துவா மாவட்டங்களில் சர்வதேச எல்லையோரம் அருகே அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி மற்றும் கஸ்பா செக்டார்களில் இரவு 8மணி அளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர் இதற்கு நமது தரைப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இதைப்போல் இரவு 12.45 மணியளவில் கத்துவா மாவட்டம் சந்த்வா மற்றும் கரோல் மித்ராய் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்கி உள்ளனர், […]

Read More

தோல்வியில் முடிந்த இந்தியா-சீனா இராணுவ பேச்சுவார்த்தை-நடந்தது என்ன ?

June 7, 2020

லெப்டினன்ட் ஜெனரல்கள் தலைமையிலான இந்திய மற்றும் சீன இராணுவ அதிகாரிகளுக்கு இடையே சனிக்கிழமையன்று நடந்த முக்கியமான சந்திப்பு “முடிவில்லாமல்” முடிந்தது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா சார்பில் 14 கார்ப்ஸ் கமாண்டிங் அதிகாரி லெப் ஜென் ஹரிந்தர் சிங் மற்றும் சீனா சார்பில் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.மோதலின் ஒரு மாத காலத்திற்கு பிறகு இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு முன் மேஜர் ஜெனரல்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.தற்போது தான் முதல் […]

Read More

முக்கிய அல் காய்தா தலைவரை கொன்று முக்கிய ஐ.எஸ் தளபதியை கைது செய்த ஃபிரெஞ்சு சிறப்பு படைகள் !!

June 7, 2020

கடந்த சில நாட்களில் மாலியில் ஃபிரெஞ்சு சிறப்பு படைகள் மேற்கொண்ட இருவேறு நடவடிக்கைகளில் முக்கிய அல் காய்தா தலைவர் கொல்லப்பட்டு மற்றோரு முக்கிய ஐ.எஸ் தளபதி கைது செய்யப்பட்டுள்ளான். ஜூன் மூன்றாம் தேதி அல்ஜீரிய எல்லையை ஒட்டியுள்ள மாலி நாட்டின் வடக்கு பகுதியில் முக்கிய அல் காய்தா தளபதியான அப்தெல்மாலெக் திரவுக்தால் மற்றும் சிலர ஃபிரெஞ்சு சிறப்பு படைகளால் கொல்லப்பட்டனர் கொல்லப்பட்ட அப்தெல்மாலெக் 15வருட அனுபவம் மிக்கவன் எனவும், குண்டுகளை செய்வதிலும் கையாள்வதிலும் தேர்ந்தவன் எனவும் பல […]

Read More

சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை – இந்தோனேசியா அதிரடி !!

June 7, 2020

சீனா பல பகுதிகளை தனக்கு உரியது என உரிமை கொண்டாடி வருகிறது. இதை போல இந்தோனேசியாவுக்கு சொந்தமான சில பகுதிகளை சீனா பல ஆண்டு காலமாக உரிமை கோரி வருகிறது. இதற்கு இந்தோனேசியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஐநா பொது செயலாளர் அவர்களுக்கு இது குறித்து கடிதம் அனுப்பியது. இதற்கு விளக்கம் அளித்த சீனா இந்தோனேசியாவுடன் எந்த வித எல்லை பிரச்சினையும் இல்லை சில முரண்பாடுகள் மட்டுமே உள்ளன என்றுள்ளது. இதற்கு இந்தோனேசியா சீனாவின் தான்தோன்றித்தனமான […]

Read More