Day: June 5, 2020

காஷ்மீரில் மிகப்பெரிய தேடுதல் வேட்டை , 8 பயங்கரவாதிகள் வரை பதுங்கி இருப்பதாக தகவல் !!

June 5, 2020

இந்திய தரைப்படைக்கு ரஜோவ்ரி பகுதியில் 8 பயங்கரவாதிகள் வரை பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் வீரர்கள் மிகப்பெரிய தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.தற்போது வரை 1 பயங்கரவாதி கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ரஜோவ்ரி பகுதியில் தான் நேற்றிரவு பாக் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நமது சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் எனும் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

காஷ்மீரில் 24கிலோ வெடிபொருள் கண்டுபிடிப்பு !!

June 5, 2020

நேற்று முன்தினம் காஷ்மீர் காவல்துறையினருக்கு வெடிபொருள் பதுக்கல் பற்றிய துப்பு கிடைத்தது. இதனையடுத்து தெற்கு காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டம் நானில் பகுதியை சேர்ந்த ஆதில் மக்புல் வானி என்பவனுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் சுமார் 24கிலோ அளவிலான வெடிபொருள் பாலித்தீன் மற்றும் நைலான் கவர்களில் பதுக்கி வைக்கபட்டு இருந்தது. காவல்துறையினர் ஆதில் வானியை விசாரித்த போது இதற்கு உதவியாக மேலும் மூவர் இருந்ததாக கூறியுள்ளான. அந்த மூவரின் பெயர்களும் வெளியிடப்பட்டு உள்ளன. 1) ஹூமாரா பகுதியை […]

Read More

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீரமரணம் !!

June 5, 2020

தமிழகத்தின் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் . இந்திய தரைப்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் பணிபுரிந்து வந்த அவர் வியாழக்கிழமை அன்று இரவு ரஜோவ்ரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மோர்ட்டார்களை கொண்டு தாக்கியதில் வீரமரணம் அடைந்தார். தேசத்திற்காக வீமரணமடைந்த இந்த வீரனுக்கு எமது வீரவணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம்.

Read More

சீன நிறுவனத்தை 5ஜி தொழில்நுட்ப நிறுவதலில் இருந்து வெளியேற்றி ஆப்பு வைத்த கனெடிய அரசு !!

June 5, 2020

சீன நிறுவனமான ஹூவாய் பல்வேறு நாடுகளில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிறுவி உள்ளது. மேலும் பல நாடுகளில் 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவும் பணிகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து சமீபத்தில் இநாநிறுவனத்திற்கு தடையும் விதித்துள்ளது. இதனை தொடர்ந்து கனெடிய அனசு ஹூவாய் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு எரிக்ஸன் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. இந்தியா பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனத்திற்கு இப்பணிகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

மலபார் போர்ப்பயிற்சி ஆஸ்திரேலியாவை இணைக்க இந்தியா திட்டம் !!

June 5, 2020

கடந்த 1992ஆம் ஆண்டு முதல் மலபார் போர்ப்பயிற்சி இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் இடையே தொடங்கப்பட்டது. பல வருட காலமாக இருதரப்பு போர்ப்பயிற்சியாக இருந்த இது கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்பான் இணைய முத்தரப்பு போர்ப்பயிற்சி ஆனது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவும் இந்த போர்ப்பயிற்சியில் இணைய ஆர்வம் தெரிவித்து வந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவை இணைக்க மறுத்து வந்தது, இதற்கு காரணமாக சீனாவுக்கு எதிராக நால்வர் ராணுவ கூட்டனி எனும் பேச்சு உருவாகி விடும் என கூறி வந்தது. […]

Read More

நெருப்புடன் விளையாட வேண்டாம் பாக் ராணுவ தளபதி பாபர் இஃப்திகார் பேச்சு !!

June 5, 2020

பாக் ராணுவத்தின் மக்கள் மற்றும் செய்தி தொடர்பு பிரிவின் தலைமு அதிகாரியாக இருப்பவர் லெஃப்டினன்ட் ஜெனரல் பாபர் இஃப்திகார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நமது நாட்டை விமர்சனம் செய்துள்ளார். இந்தியா பல்வேறு தளங்களில் அவமானப்பட்டுள்ளதாகவும், சீனா நேபாள் போன்ற நாடுகளுடன் எல்லை பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரகவித்துள்ளார். மேலும் பேசுகையில் இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைகக்கும் பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் எனவும், நினைத்து பார்க்க முடியாத விளைவுகள் ஏற்படும் ஆகவே நெருப்புடன் விளையாட […]

Read More

இந்திய தூதரக அதிகாரியின் வாகனத்தை பாகிஸ்தானில் விரட்டிய ஐ.எஸ்.ஐ !!

June 5, 2020

பாகிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதருக்கு அடுத்தபடியான பொறுப்பில் இருப்பவர் கவ்ரவ் அலுவாலியா. இவருடைய வீட்டுக்கு வெளியே ஐ.எஸ்.ஐ பல உளவாளிகளை பல வாகனங்களில் நிறுத்தியுள்ளது. அப்படி சமீபத்தில் அவர் வெளியே வருகையில் இருசக்கர வாகனத்தில் ஒரு ஐ.எஸ்.ஐ நபர் பின்தொடர்ந்து விரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய சம்பவங்கள் புதிதில்ல, இந்திய தூதரகத்தில் பணியாற்றும் கடற்படை ஆலோசகர், முதன்மை செயலாளர் ஆகியோரின் வாகனங்களையும் […]

Read More