Day: June 1, 2020

காஷ்மீரில் மேலும் பத்து பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம்-மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்வு

June 1, 2020

காஷ்மீரின் மெந்தர் செக்டாரில் இராணுவம் நடத்திய அதிரடி ஆபரேசனில் பத்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். இதற்கு முன் நௌசேரா செக்டாரில் இராணுவம் நடத்திய அதிரடி ஆபரேசனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரில் பயங்கரவாத ஊடுருவலை இந்திய இராணுவம் வெற்றிகரமாக தடுத்துள்ளது. நௌசேரா செக்டாரின் கலால் ஏரியா பகுதியில் உள்ள அர்சல் நல்லா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை இராணுவ வீரர்கள் கண்டுள்ளனர். இவர்களை தடுத்து அழிக்க உடனடியாக ஆபரேசன் நடத்தப்பட்டது.ஆபரேசனின் போது பயங்கரவாதிகள் வீரர்களை […]

Read More

எல்லைக்கு கனரக தளவாடங்களை நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா !!

June 1, 2020

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்களும் எல்லைக்கு கனரக தளவாடங்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா டாங்கிகள் பிரங்கிகள் ஆகியவற்றை நகர்த்திய நிலையில் தற்போது இந்திய ராணுவமும் டி72 டாங்கிகள் மற்றும் ஆர்ட்டில்லரி பிரங்கிகளை நகர்த்தி உள்ளது. நகர்த்தப்பட்ட தளவாடங்கள் களத்தின் பின் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன, இதன்மூலம் நிலைமை மோசமானால் சீன படைகளை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படையும் பாதுகாப்பு நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் தெரிகிறது.

Read More

லடாக்கிற்கு மேலதிக துருப்புகளை அனுப்பும் இந்தியா !!

June 1, 2020

கடந்த 25 நாட்களாக இந்தியா சீனா இடையேயான பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது அவ்வப்போது மோதல்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்படியான பகுதிகளில் நமது இருப்பை பல்ப்படுத்த மேலதிக துருப்புகளை இந்தியா நகர்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வடக்கு கட்டளையகத்தின் பல ரிசர்வ் படையணிகள் மற்றும் இந்தோ திபெத் எல்லை காவல்படையினரும் எல்லையோர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கள முன்னனியில் இருக்கும் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் படையணிகளுடைய வீரர்கள் காஷ்மீரில் […]

Read More

சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தோனேசியா !!

June 1, 2020

சீனா தென்சீன கடல் பகுதியில் பல நாடுகளுக்கு உரிய கடல்பகுதியையும் சட்டத்திற்கு புறம்பாக உரிமை கோரி வருகிறது. இதன் காரணமாக ஃபிலப்பைன்ஸ் அரசு கடந்த 2016ஆம் ஆண்டு நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் சீனா செய்வது சர்வதேச விதிகளுக்கு புறம்பானது என தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது இந்தோனேசிய அரசு இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆசியான் நாட்டு அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் சர்வதேச விதிகளுக்கு புறம்பான சீன நடவடிக்கைகளை அடக்க நாம் […]

Read More

தில்லியில் பிடிப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளிகள் !!

June 1, 2020

தில்லியில் நேற்று காவல்துறையினரால் சந்தேகத்திற்கு இடமான இருவர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் இந்தியர்கள் எனக்கூறி போலி ஆதார் அட்டைகளை சமர்பித்து தப்பிக்க முயற்சி செய்த நிலையில் போலி ஆதார் அட்டைகள் மாட்டி கொண்டன். அவர்களை மேலும் விசாரணை செய்ததில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் எனவும், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றி வருகின்றனர் எனவும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் எனவும் இங்கு தூதரக பணியாளர்கள் எனும் அடையாளத்தோடு உளவு […]

Read More

42,000 குண்டு துளைக்காத கவசங்கள் மற்றும் 176இலகுரக கவச வாகனங்கள் வாங்க அனுமதி !!

June 1, 2020

மத்திய ரிசர்வ் காவல்படை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. மேலும் நம் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பின் அசைக்க முடியாத தூணாகவும் விளங்கி வருகிறது. இந்த படையை நவீனபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது 42,000 கவச உடைகளை வாங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் 176 இலகுரக கவச வாகனங்களை கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 80 மாருதி ஜிப்ஸிகள் குண்டு துளைக்காத கவசங்களால் மறுவடிவமைப்பு செய்யப்படும். இந்த வாகனங்கள் கிரெனெடு […]

Read More

எல்லையில் பயங்கரவாத ஊடுருவலை முறியடித்த இராணுவம்;மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம்

June 1, 2020

காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரில் பயங்கரவாத ஊடுருவலை இந்திய இராணுவம் வெற்றிகரமாக தடுத்துள்ளது. நௌசேரா செக்டாரின் கலால் ஏரியா பகுதியில் உள்ள அர்சல் நல்லா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை இராணுவ வீரர்கள் கண்டுள்ளனர். இவர்களை தடுத்து அழிக்க உடனடியாக ஆபரேசன் நடத்தப்பட்டது.ஆபரேசனின் போது பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட இராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த பதிலடியில் மூன்று பயங்கரவாதிகள் அங்கேயே வீழ்த்தப்பட்டனர்.பாக் தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்ப முயற்சித்து வருகிறது.

Read More

சீன அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்படலாம்-மைக் பாம்பியோ

June 1, 2020

அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி மைக்கேல் பாம்பியோ அவர்கள் ஞாயிறு அன்று, சீன இராணுவம் ஏற்படுத்தும் அச்சுறுத்துதல்களுக்கு எதிரான இந்தியா உட்பட பல உலக நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட முடியும் என கூறியுள்ளார். சீனா தனது இராணுவ பலத்தை அதிகரிப்பதிலேயே குறியாக உள்ளது.சீன அச்சுறுத்தல் குறித்து அறிய இராணுவ அமைச்சகம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.இந்த அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க விருப்பங்களை பாதுகாக்க அரசு அனைத்து முயற்சியும் எடுத்து வருகிறது.இவ்வாறு சீன அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா,ஆஸ்திரேலியா,தென் கொரியா […]

Read More