சீன ராணுவ அதிகாரியின் மூக்கை உடைத்த இளம் இந்திய ராணுவ அதிகாரி !!

  • Tamil Defense
  • May 12, 2020
  • Comments Off on சீன ராணுவ அதிகாரியின் மூக்கை உடைத்த இளம் இந்திய ராணுவ அதிகாரி !!

சில நாட்களுக்கு முன்பு சிக்கீம் மாநிலத்தில் உள்ள நாகு லா பகுதியில் உள்ள முகுத்தாங் அருகே அத்துமீறி உள்ளே நுழைந்த சீன படையினரை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர் அப்போது கைகலப்பு ஏற்பட்டதை பதிவு செய்திருந்தோம்.
தற்போது இந்த நிகழ்வு குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த அத்துமீறல் நடைபெற்ற நேரத்தில் நமது தரைப்படையின் அஸ்ஸாம் ரெஜிமென்ட்டின் வீரர்கள் சீன படையினரை தடுத்து நிறுத்தி திரும்பி செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அப்போது ஆவேசமடைந்த ஒரு சீன தரைப்படை மேஜர் “இந்திய ராணுவத்தின் கேப்டன் ஒருவரை நோக்கி இது உங்கள் பகுதி அல்ல சிக்கீமை விட்டு திரும்பி செல்லுங்கள்” என கூறிவிட்டு ஆத்திரத்துடன் பாய்ந்தார்.

இதை கேட்டதும் படையில் இணைந்து சில மாதங்களே ஆன இளம் அதிகாரியான லெஃப்டினன்ட் பிரோல் தாஸ் சீன அதிகாரியை நோக்கி “சிக்கீம் எங்கள் பகுதி இல்லையா ??” என ஆவேசமாக பாய்ந்து அவரின் மூக்கை இடித்து உடைத்துள்ளார். இதில் மூக்கு உடைந்து இரத்தம் சிந்த கீழே அந்த சீன அதிகாரி சரிந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து கைகலப்பு ஏற்பட சீன படையினர் ஆணி பொருந்திய தடிகளால் நமது வீரர்களை தாக்க நமது வீரர்கள் திரும்ப பாய்ந்து சீனர்களை அடித்து துவைத்துள்ளனர்.

இதன் பின்னர் சமாதானம் ஏற்பட இளம் அதிகாரியை உடனடியாக அந்த இடத்தை விட்டு நமது படையினர் கூட்டி சென்றுள்ளனர்.

உடனடியாக தகவல் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு கட்டளையக தளபதிக்கும், சுக்னாவில் உள்ள த்ரிநேத்ரா டிவிஷனுடைய தலைமை கட்டளை அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட இளம் அதிகாரியை சந்திக்க முயன்றுள்ளனர். ஆனால் முகுத்தாங் பகுதியில் மோசமான காலநிலை நிலவியதால் ஹெலிகாப்டர் பயணம் செய்ய முடியவில்லை.

மேலும் தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே அவர்களும் “வீரம் செறிந்த அந்த இளம் வீரரை சந்திக்க வேண்டும்” என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெஃப்டினன்ட் பிரோல் தாஸ் அவர்களின் தந்தை ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார், அவரது தாத்தா இந்திய விமானப்படையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சமின்றி சீனர்களுக்கு பாடம் புகட்டிய அந்த இளம் வீரனை மனதார நாமும் பாராட்டுவோம்.