இந்தியாவுடன் சுமூகமான உறவை விரும்புகிறோம்- தலிபான்

  • Tamil Defense
  • May 10, 2020
  • Comments Off on இந்தியாவுடன் சுமூகமான உறவை விரும்புகிறோம்- தலிபான்

முதன் முறையாக இந்தியாவை பெயரால் குறிப்பிட்டுள்ள ​​தலிபான் இந்திய நாட்டோடு ஒரு நேர்மறையான உறவைப் பெற விரும்புகிறோம் என்று கூறியதுடன், ஆப்கானிஸ்தானில் புது தில்லியின் ஒத்துழைப்பை வரவேற்று தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

தங்களது நாட்டின் தேவை மற்றும் இருபக்க உறவின் அடிப்படையில் இந்தியாவுடன் சுமூகமான உறவை பேண விரும்புவதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்கால ஆப்கனின் கட்டுமானத்திற்கு இந்தியாவின் உதவி தேவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆப்கனில் மட்டுமே எங்களது போராட்டம் இருக்கும் எனவும் எல்லை தாண்டிய விரிவு பற்றி எங்களுக்கு எந்தவித கருத்தாக்கமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்கும் இருக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்த பிறகு தான் இந்த தகவலை தாலிபன் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் காபூலில் உள்ள ஒரு குருத்வாராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 ஆப்கன் சீக்கியர்கள் உயிரிழந்தனர்.அதில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்தார்.

இதற்கு இந்தியா தனது கடும் மனக்கசப்பை வெளியிட்டு உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.தவிர ஆப்கனுக்கு கொரானாவை எதிர்த்து போராடவும் இந்தியா உதவி வருகிறது.