
தியேட்டர் கமாண்ட் என்பது பெரும்பாலும் விமானப்படை மற்றும் இராணுவத்தின் பகுதிகள் இணைந்ததாக மட்டுமே உள்ளது.வடக்குசார் எல்லை என்று வரும் போது அங்கு கடற்படையின் தொகுதியும் இருத்தல் வேண்டும் என ஒருங்கிணைந்த படைத்தளபதி ராவத் அவர்கள் கூறியுள்ளார்.ஏற்கனவே 2017ல் கடற்படையின் பி-8ஐ தொலைதூர கடல்சார் கண்காணிப்பு விமானங்கள் சீன இராணுவ நகர்வை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
படைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்குள் பிணைப்னை ஏற்படுத்தவும் அதன் மூலம் சிறிய சக்திமிக்க படையை உருவாக்க வேண்டும் எனவும் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.அதில் முதல் பணியாக விமானப்படை தலைமையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றன.அதன் பிறகு ஒரு கடல்சார் கட்டளையகமும் அதன் பின் தரைசார் கட்டளையகமும் உருவாக்கப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த தியேட்டர் கமாண்ட்கள் உருவாக்குதல் பற்றிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் இந்தியாவின் ஆபரேசனல் தேவைக்கு ஏற்ப இந்த கமாண்ட்கள் அமையும் என இராணுவ தளபதி மனோஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கமாண்ட் உருவாக்குதல் பற்றிய செயல்திட்டம் தற்போது நல்லபடியாக நடந்து வருவதாகவும் 2-3 வருடத்திற்குள் அது ஒரு வடிவம் பெறும் எனவும் தளபதி ராவத் தெரிவித்துள்ளார்.
கடற்சார் கமாண்ட் குறித்து கூறுகையில் கடற்படையிடம் உள்ள விமானங்கள் தேவைப்படும் பட்சத்தில் பாலைவன பகுதிக்கு நகர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.அதாவது பாக் எல்லையை ஒட்டிய பகுதிகள் தான் அவை.