
இந்தியாவுக்கான பிரேசில் தூதர் ஆன்ட்ரே அரான்ஹோ கொர்ரியா டோ லேகோ நமது தேசிய தொலைக்காட்சியான தூதர்ஷனிற்கு அளித்த பேட்டியில் பிரேசில் நாட்டின் எம்ப்ரேர் விமான நிறுவனத்துடன் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இணைந்து கூட்டு தயாரிப்பு பணிகளில் இறங்கினால் அதனல மனதார வரவேற்போம் என கூறியுள்ளார்.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி முனைவர் ஆர்.கே. தியாகி அவர்கள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “இந்தியா எம்ப்ரேர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் (குறைந்தபட்சம் 51%) எனவும், இதன்மூலம் இஜெட் ஈ2 மற்றும் இ.ஆர்.ஜே145 ஆகிய விமானங்களை உடான் திட்டத்தின் நலனுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்கு 300 விமானங்கள் தேவை எனவும் கூறினார், மேலும் சீனா முந்தி கொள்வதற்கு முன்னர் நாம் நடவடிக்கை எடுப்பது நல்லது என்றார்.
பல இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகையில் எம்ப்ரேர் நிறுவனத்தின் இ190-இ2 விமானத்தை இந்திய விமானப்படைக்கு ஏவாக்ஸ், எரிபொருள் டேங்கர், சமிக்ஞை உளவு போன்ற பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ள முடியும் எனக்கூறி வருவது குறிப்பிடத்தக்கது.