
காஷ்மீரில் மேற்கு கட்டளையக தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்பி சிங் அவர்கள் முன்னனி நிலைகளில் இராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.கதுவா மற்றும் சம்பா நிலைகளில் உள்ள ரைசிங் ஸ்டார் கார்ப்ஸ் படைப்பிரிவை ஆய்வு செய்தார்.
எல்லையின் 744கிமீ எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் 198கிமீ சர்வதேச கோடு பகுதியில் தற்போது அத்துமீறிய துப்பாக்கிச்சூடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு பிரிவு தளபதியுடன் ரைசிங் கார்ப்சின் கமாண்டிங் அதிகாரி லெப் ஜென் உபேந்திரா திவிவெதி அவர்களும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.இரு தளபதிகளும் களநிலைகளை ஆராய்ந்ததாகவும் கள கமாண்டர்களை சந்தித்து ஆபரேசன் தயார் நிலை குறித்து விவாதித்ததாகவும் பாதுகாப்பு செய்திதொடர்பாளர் லெப் கலோ தேவேந்தர் ஆனந்த் கூறியுள்ளார்.
வீரர்களை நேரடியாக சந்தித்தது அவர்களை ஊக்கமூட்டியதுடன் அவர்கள் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துகூறினார்.
ரைசிங் ஸ்டார் கார்ப்சின் தயார் நிலை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் கொரானாவிற்கு எதிரான போரில் சிறப்பாக செயல்படுவதற்கும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.
வடக்கு காஷ்மீரின் இரு அடுத்தடுத்த தாக்குதலுக்கு பிறகு தளபதியின் இந்த எல்லைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.இந்த தாக்குதல்களில் கலோனல் உட்பட எட்டு வீரர்களை நாம் இழந்துள்ளோம்.
இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அதிர்ச்சியில் பாகிஸ்தானும் தனது பகுதியில் வான் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.
இந்தியாவும் தவறான காரணத்தால் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உலக நாடுகளை வேண்டுவதாக பாக் பிரதமர் இம்ரான் கானும் தனது ட்விட்டர் பக்கதில் பதிவு செய்திருந்தார்.