இந்தியாவின் கோபத்திற்கு கடுமையான பதிலடி கிடைக்கும்: பாக் வெளியுறவு அமைச்சர் பேச்சு

  • Tamil Defense
  • May 28, 2020
  • Comments Off on இந்தியாவின் கோபத்திற்கு கடுமையான பதிலடி கிடைக்கும்: பாக் வெளியுறவு அமைச்சர் பேச்சு

இந்தியாவின் முரட்டுத் தனமான கோபத்திற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் தனது நாட்டு மக்களும் இராணுவ படையும் அதற்கு தயாராக இருப்பதாக பாக் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ரேடியோ பாகிஸ்தானில் பேசிய அவர் இந்தியா பாகிஸ்தானை விரோதமாக எண்ணுகிறது.இதனால் பாகிஸ்தானை அச்சமூட்ட நினைக்கிறது.நாங்க கடந்த காலத்தில் பொறுமையாக இருந்தோம்.இனி வரும் காலங்களிலும் பொறுமையாகவே இருப்போம் என அவர் பேசியுள்ளார்.

ஆனால் தன்னை பாதுகாத்து கொள்ள பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாவும் அவர் பேசியுள்ளார்.

பாக் கடந்த புதன் அன்று இந்திய ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாகவும் இது இந்தியாவின் முரட்டத்தனத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.ஆனால் அதை எங்கள் குறையாக எண்ண வேண்டாம் எனவும் பேசியுள்ளார்.

குரேஷியின் இந்தப் பேச்சுக்கு இந்தியா எந்த பதிலும் வழங்கவில்லை.