எங்கள் எல்லையில் தான் ரோந்து செல்கிறோம்-இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா

  • Tamil Defense
  • May 13, 2020
  • Comments Off on எங்கள் எல்லையில் தான் ரோந்து செல்கிறோம்-இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா

பாங்கோங் ஏரி புறத்தில் இருக்கும் இந்தியா மற்றும் சீனா வீரரகளுக்கு இடையோன மோதம் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் தற்போதுள்ள நிலைையை தீவிரமாக்கும் வண்ணம் இந்தியா எந்த செயலையும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எங்கள் வீரர்கள் எங்கள் எல்லையில் தான் ரோந்து செல்கின்றனர் என இந்தியாவிற்கு சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு நாட்டு வீரர்களுக்குமிடையே உரசல் இருப்பதால் இந்தியாவுடன் தொடர்ந்து நாங்கள் இணைப்பில் உள்ளோம் என சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன் கூறியுள்ளார்.

எல்லைப் பிரச்சனை தொடர்பான சீனாவின் முடிவு தெளிவாக உள்ளதாகவும் எல்லையில் அமைதியை கடைபிடிக்கும் நோக்குடன் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பிரச்சனையை பெரிதாக்காத வண்ணம் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.மே 5-6 தொடங்கிய பதற்றம் இன்று வரை அங்கு நீடித்து வருகிறது.

கிட்டத்தட்ட இந்த பிரச்சனைக்குரிய பகுதியில் தான் இரு சீன இராணுவ வானூர்திகள் பறந்தன.இதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை சில சுகாய் விமானங்களை அங்கு அனுப்பியது.