இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அல் காய்தா பயங்கரவாதி !!

  • Tamil Defense
  • May 22, 2020
  • Comments Off on இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அல் காய்தா பயங்கரவாதி !!

அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்க்கப்பட்ட பயங்கரவாதியை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு நாடு கடத்தி உள்ளது. இவன் அங்கு 5வருட தண்டனை காலத்தை முடித்த பின்னர் தான் நாடு கடத்தப்பட்டுள்ளான்.

ஹைதராபாத்தை சேர்ந்த பொறியாளரான இப்ராஹீம் ஸூபைர் மொஹம்மது அமெரிக்காவில் பணியாற்றி வந்தான் பின்னர் அங்கு குடியுரிமையும் பெற்று கொண்டான்.

பின்னர் அங்கிருந்து கொண்டே அல் காய்தா பயங்கரவாத இயக்கத்திற்கு பண பரிமாற்றம் செய்வதில் உதவி புரிந்துள்ளான். இவனுடன் பாகிஸ்தானை சேர்ந்த ஆசீஃப் அஹமது சலீம் மற்றும் சுல்தான் ரும் சலீம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மூவரும் அல் காய்தா இயக்கத்தின் தலைவனான அன்வர் அல் அவ்லாகிக்கு பண பரிமாற்றம் செய்துள்ளனர்.

ஸூபைரின் சகோதரன் ஃபருக் மொஹம்மது இந்த வழக்கை விசாரித்த நிதீபதியை கொல்ல முயற்சித்த காரணத்துக்காக 27 வருட கடுங்காவல் தண்டனையை அனுபவித்து வருகிறான் என்பது கூடுதல் தகவல்.

இந்த ஃபருக் மற்றும் மற்ற இரு நபர்களும் கடந்த 2009ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்று 22000 அமெரிக்க டாலர்களை அவ்லாகியிடம் கொடுத்துள்ளனர்.
மேலும் இவர்கள் பலமுறை இப்படி செய்துள்ளனர். 2004-2009க்கு இடையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 50முறை வரை இவர்கள் அல் காய்தா இயக்கத்திற்கு பண உதவி செய்துள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட ஸூபைர் மொஹம்மது தற்போது அமிர்தசரஸ் நகரில் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டு உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.