
வடக்கு சிக்கிமில் பனி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் குழு மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப் கலோ உட்பட இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
லெப்டினன்ட் கலோனல் ரோபெர்ட் டிஏ மற்றும் சாப்பர் சபலா சன்முக ராவ் ஆகிய இரு வீரர்களும் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்துள்ளனர்.
வடக்கு சிக்கமில் பனியை அகற்றும் பணியில் வீரர்கள் குழு ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பனியில் சிக்கிய மற்ற 18 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.