சத்தீஸ்கர் மாநில காவல்துறையின் அதிரடி படை வீரர் சக வீரர்கள் மீது தாக்குதல் இருவர் பலி !!

  • Tamil Defense
  • May 31, 2020
  • Comments Off on சத்தீஸ்கர் மாநில காவல்துறையின் அதிரடி படை வீரர் சக வீரர்கள் மீது தாக்குதல் இருவர் பலி !!

சத்தீஸ்கர் மாநில காவல்துறையின் அதிரடி படை பிரிவின் 9ஆவது பட்டாலியன் நாராயண்பூர் மாவட்டம் சோட்டேதோங்கார் காவல்நிலைய பகுதியில் உள்ள ஆம்தாய் காட்டி எனும் பகுதியில் இயங்கி வந்தது.

இந்த பட்டாலியன் முகாமில் வெள்ளிக்கிழமை இரவு ப்ளட்டுன் கமாண்டர் கன்ஷியாம் குமெட்டி தனது மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த கன்ஷியாம் குமெட்டி தனது ஏகே47 துப்பாக்கியால் மூத்த அதிகாரிகளை நோக்கி சரமாரியாக சுட்டார்.

உடனடியாக சுதாரித்து கொண்ட மற்ற வீரர்கள் கன்ஷியாமை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறித்து கொண்டனர். ஆனால் இவர் சுட்டதில் ப்ளட்டுன் கமாண்டர்கள் பிந்தேஷ்வரி சாஹ்னி மற்றும் ரமேஷ்வர் சாஹூ ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும் ப்ளட்டுன் கமாண்டர் லக்ஷ்மண் ப்ரேமி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட கன்ஷியாம் குமெட்டியை சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.