பாக் எல்லையில் கடும் தாக்குதல்-2 வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • May 2, 2020
  • Comments Off on பாக் எல்லையில் கடும் தாக்குதல்-2 வீரர்கள் வீரமரணம்

கடந்த சில நாட்களாகவே எல்லை பதற்றத்துடன் காணப்படுகிறது.பாக் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தியா சார்பில் கடும் பதிலடியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா நடத்திய தாக்குதல் ஒரு பாக் வீரர் உயிரிழந்துள்ளார் என நேற்று பாக் ஒப்புக்கொண்டது.ஆனால் அத்துடன் நிறுத்தாமல் பாக் மேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் நேற்று இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.

அதே போல இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் பாக் கடும் தாக்குதலை நடத்தியது.இதில் இரு இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இரு வீரர்கள் காயமடைந்தனர்.

ஹவில்தார் கோகரன் சிங் மற்றும் நாய்க் சங்கர் என இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஹவில்தார் நாரயன் சிங் மற்றும் நாய்க் பிரதீப் ஆகிய இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.