எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய பயங்கரவாதிகள்-இரு வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • May 21, 2020
  • Comments Off on எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய பயங்கரவாதிகள்-இரு வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகரில் ரோந்து சென்ற எல்லைக் காவல் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டத்தின் பன்டஹ் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வீரர்கள் 37வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கான்ஸ்டபிள் ஜியாவுல் ஹக் மற்றும் கான்ஸ்டபிள் ரானா மோன்டோல் ஆகிய இரு வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர்.

டியூட்டியில் இருந்த இரு வீரர்கள் கடையில் பொருள்கள் வாங்க சென்ற போது பைக்கில் வந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.ஒரு வீரர் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தார்.மற்றொரு வீரர் மருத்துவமனையில் வீரமரணம் அடைந்தார்.அவர்களது ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.

வீரவணக்கம்