தைவான் மற்றும் ஹாங்காங்கை ஒட்டிப் பறந்த அமெரிக்க குண்டுவீசு விமானங்கள்- உட்சகட்ட பதற்றம்

அமெரிக்க விமானப்படையின் இரு பி-1பி குண்டுவீசு விமானங்கள் மற்றும் ஒரு வானிலேயே எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்கள் தைவானுக்கு தெற்கிலும் ஹாங்கிங்கிற்கு மிக அருகிலும் பறந்து சென்றுள்ளன.

ஹாங்காங்கிற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிவித்த பின்பும், தைவனுக்கு அருகே போர்விமானங்களையும் கடற்படை கப்பல்களையும் சீனா அனுப்பிய பிறகு அமெரிக்காவின் இந்த செயல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு குண்டுவீசு விமானங்கள் மற்றும் ஒரு KC-135R டேங்கர் விமானங்கள் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்து பறந்து தென்சீனக் கடல் நோக்கி சென்றுள்ளன.

இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.