தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தளபதியுடன் பிரதமர் அவசர ஆலோசனை

  • Tamil Defense
  • May 26, 2020
  • Comments Off on தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தளபதியுடன் பிரதமர் அவசர ஆலோசனை

கிழக்கு லடாக் பகுதியின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவுடனான மோதல் அதிகரித்து வரும் வேளையில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,ஒருங்கிணைந்த படை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்களுடன் முப்படை தளபதிகளும் மற்றும் ஒருங்கிணைந்த தளபதி அவர்களின் சந்திப்பிற்கு பிறகு இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் சீன எல்லை விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் இந்திய இராணுவம் எல்லையில் இருந்து பின்வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சீன படைக்குவிப்பிற்கு சமமாக முறையில் இந்தியாவும் படைக்குவித்துள்ளது.அதே போல கட்டுமானம் தொடர்பாக தான் சீனா பிரச்சனை செய்து வருகிறது.இருந்தும் தற்போது எல்லையில் அனைத்து கட்டுமானங்களும் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.இந்திய பகுதிகளை இன்றல்ல எதிர்காலத்திலும் பாதுகாப்பு செய்ய இந்த கட்டுமானங்கள் மிக அவசியம் ஆகும்.

இந்திய சீன அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பிரச்சனை தீரவில்லை.

இதற்கு முன் இராணுவ தளபதியும் லடாக்கிற்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.