
இராணுவத்தின் முக்கிய கட்டளை அதிகாரிகளின் சந்திப்பு வரும் மே 27 முதல் மூன்று நாட்களுக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.லடாக்கில் பிரச்சனை அதிகரித்து வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டாம் கட்ட சந்திப்பு ஜீன் மாத இறுதியில் நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏப்ரலில் இந்த சந்திப்பு நடந்திருக்க வேண்டும் ஆனால் கொரானா காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
பாக் மற்றும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்படும் எனத் தெரிகிறது.
காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இது தவிர இராணுவத்தின் தளவாட இறக்குமதி குறித்தும் பேசப்பட உள்ளது.உள்நாட்டு தளவாடங்கள் பெறுவது குறித்தும் பேசப்பட உள்ளது.