லெப்டினன்ட் உமர் பயஸ்

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கமளிக்கும் உமர் பயாஸை பற்றிய உண்மைகள் .

டிசம்பர் 10, 2016ல் ராஜபுதன ரைஃபிளின் இரண்டாவது பட்டாலியனில் லெப்டினன்ட்டாக இருந்த லெப் உமர் ஒரு திருமண நிகழ்விற்காக ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள தன் உறவினர் இல்லத்திற்கு சென்ற போது மே 9-ஆம் தேதி இரவு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புரல் முஜாகிதீன் தீவிரவாகளால் கடத்தப்பட்டு மே 10ல் கொல்லப்பட்டார்.

அவருடைய தந்தை சிறு விவசாயி.அவருக்கு இரு சகோதரிகளும் உள்ளனர்.

அவருடைய தந்தை ஆப்பில் விற்கும் சிறு விவசாயியாக இருந்தார். பயாஸ் NDA ஹாக்கி அணியில் இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு சிறந்த வாலிபால் விளையாட்டு வீரராகவும் இருந்தார் .2012லிருந்து 2015 வரையான பயிற்சி காலகட்டத்தின் போது வாலிபால் மற்றும் ஹாக்கி அகாடமியில் உறுப்பினராக இருந்தார்.

அவர் குணத்தால் சாதுவானவர் .”அவர் அகாடமியில் சிறப்பான செயல் பதிவுகளை பெற்றவர்”என்று NDA அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.”நாம் ஒரு சிறந்த ராணுவ அதிகாரியை இழந்திருக்கிறோம்”என லெப்டினன் ஜெனரல் அபாய் கிருஷ்ணா பயாசின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வின் போது வருந்திக் கூறினார்.

அவர் எப்பொழுதும் எதற்கும் தயாராக இருக்க கூடிய ஒரு நபர். அவர் NDA மூன்று வருடம் மற்றும் IMA ஒரு வருடம் இருந்தார்.அதன் பின் சிறந்த ரெஜிமெண்டுகளில் ஒன்றில் இணைந்தார். இந்திய ராணுவத்திற்கு அவருடைய தொண்டை பற்றி பேசுகையில் “நீங்கள் அவருடன் இருந்தால் நன்றாக உணர்வீர்கள். ஒரு இளம் இந்திய வீரர் அவர் விடுப்பில் சென்ற பொழுது பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட செயல்கள் எப்படி அவர்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் என்றும் இதுவே அவர்களின் கயமைத்தனத்திற்கு சான்று” என்றும் கூறியிருந்தார் லெப் கிருஷ்ணா அவர்கள்.

இது பலரின் மனசாட்சியை தட்டி எழுப்பும் எனவும் கூறியுள்ளார்.”அவர் ஒரு நாயகன். ஏனெனில் அவருடைய போராட்டம் ஐந்து வருடத்திற்கு முன்பே என் டி எ வில் சேர முடிவு எடுத்தபோதே தொடங்கி விட்டது” என மேஜர் ஜெனரல் ராஜு கூறியுள்ளார்.மக்கள் எப்பொழுதும் அவருடன் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். பெய்பாவில் உள்ள, பயாசை போன்ற வீரர்களை உருவாக்கும் பள்ளி ஒன்றுக்கு பயாசின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

அவரை கொன்ற பயங்கரவாதிகளை மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ல் நடந்த என்கௌன்டரில் இராணுவ வீரர்கள் வீழ்த்தினர்.

வீரவணக்கம்