சிஆர்பிஎப் வீரர் சந்திரகேசர் அவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சம் நிதி உதவி- தமிழக அரசு
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த CRPF வீரர்
சந்திரசேகருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துளளார்.அத்துடன்
அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியும்,
ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹேன்ட்வாரா பகுதியின் காசியபாத் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
எதிர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.குப்வாராவின் கிரால்குன்ட் ஏரியாவில் வங்கம்-காசியபாத் பகுதியில் சென்ற சிஆர்பிஎப் ரோந்து குழுவின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஏழு சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.