
காஷ்மீரின் சோகாம் பகுதியில் புதிதாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மூன்று இளைஞர்களை கூட்டு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவரின் பெயர்கள் தெரிய வந்துள்ளது,
ஸாகீர் அஹமது பட் மற்றும் அபீத் ஹூசைன் வானி ஆகியோர் ஆவர்.
இவர்களிடம் மேலதிக தகவல்களுக்காக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் அவந்திபோரா பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்து தகவலின் பேரில் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.