காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்-3 வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • May 4, 2020
  • Comments Off on காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்-3 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹேன்ட்வாரா பகுதியின் காசியபாத் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

எதிர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.குப்வாராவின் கிரால்குன்ட் ஏரியாவில் வங்கம்-காசியபாத் பகுதியில் சென்ற சிஆர்பிஎப் ரோந்து குழுவின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ஏழு சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மொத்த பகுதியும் தற்போது சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.