சீன எல்லையோரம் இந்திய வீரர்கள் குவிப்பு – ராணுவம் மறுப்பு !!

கடந்த சில நாட்கள் முன்பு சீன படையினருடன் நமது வீரர்கள் மோதி கொண்டதை பற்றி செய்திகள் வெளியாகி இருந்தன நமது பக்கத்திலும் அதனை நாம் பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில் நேற்றைய தினம் முதலே வடக்கு சிக்கீம் மற்றும் கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இரு பக்கமும் குவிக்கப்பட்டு உள்ளதாஙவும் மீண்டும் டோக்லாம் போன்ற சூழல் உருவாகி உள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று ஏ.என்.ஐ ஊடகத்திற்கு பேட்டியளித்த ராணுவ அதிகாரிகள் இத்தகைய நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என மறுத்ததோடு, இத்தகயை தவறான செய்திகளை பிரசுரம் செய்து மக்களிடம் பொய் தகவல்களை கொண்டு சேர்ப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என விமர்சனம் செய்து உள்ளனர்.

மேலும் இது போன்று மோதல்கள் ஏற்பட்டால் அது பெரிதாகி விடாமல் இருக்க களத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் தலைமையில் பேசி தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தனர்.