அமெரிக்காவின் எஃப்21 போர் விமானத்தை இந்தியா பெறும் வாய்ப்புகள் அதிகரிப்பு !!
1 min read

அமெரிக்காவின் எஃப்21 போர் விமானத்தை இந்தியா பெறும் வாய்ப்புகள் அதிகரிப்பு !!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இந்தியா வெளிநாட்டு போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த நிலையில் இந்திய விமானப்படை தளபதி உள்நாட்டு தேஜாஸ் விமானங்களும், 114 நடுத்தர பல்திறன் போர் விமானங்களும் இன்றியமையாதவை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கென மட்டுமே தயாரித்து தருவதாக அறிவித்த எஃப்21 போர் விமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்த விமானம் பழைய எஃப்16 விமானத்தின் வடிவத்தை கொண்டிருந்தாலும், இது மிக மிக நவீனமானதாகும்.

இந்த விமானமானது பல்வேறு முற்றிலும் புதிய தொழில்நுட்ப அமைப்புகள், எஃப்22 ராப்டர் மற்றும் எஃப்35 போர் விமானங்களில் காணப்படும் சில அமைப்புகளும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ இது நிச்சயமாக பாகிஸ்தான் மற்றும் சீன விமானப்படைகளுக்கு சவாலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.