
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 15 பயங்கரவாத ஏவு முகாம்களும் நிரம்பி வழிவதாக இராணுவ லெப் ஜென் பிஎஸ் ராஜீ அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
காஷ்மீரில் உள்ள பயங்கரவாதத்தின் முதுகெலும்பு இராணுவத்தால் முறிக்கப்பட்டுள்ளது.இதை சீரணிக்கமுடியாத பாகிஸ்தான் அதிக பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப முயற்சித்து வருகிறது.
இதற்காக பாக் அத்துமீறி எல்லையில் தாக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது.இதன் மூலம் இந்திய இராணுவத்தின் கவனத்தை திசைதிருப்பி பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய முயற்சித்து வருகிறது.
இது போன்ற அத்துமீறிய தாக்குதல்களுக்கும் இராணுவம் கடும் பதிலடி அளித்து வருவதாக லெப் ஜென் ராஜீ அவர்கள் தெரிவித்துள்ளார்.