சீனாவின் முரட்டுத்தனம்; இந்திய சீன எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் !!

  • Tamil Defense
  • May 20, 2020
  • Comments Off on சீனாவின் முரட்டுத்தனம்; இந்திய சீன எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் !!

லடாக் மற்றும் சிக்கீமில் சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோதலுக்கு பிறகு எல்லாம் அமைதியான நிலையில் தற்போது சீனா இந்த இரு பகுதிகளில் முரட்டுதனமாக நடந்து கொள்கிறது.

கிழக்கு லடாக்கில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகின்றன, பாங்காங் ஸோ ஏரி, தெம்சாக், தவ்லத் பெக் ஒல்டி, கல்வான் ஆறு போன்ற பகுதிகளில் இரு நாடுகளின் வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் கல்வான் ஆற்றுப்படுகை கடந்த 60 ஆண்டுகளாக மோதல்களுக்கு வித்திட்டுள்ளது. 1962போரில் கூட இப்பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற போது நமது வீரர்கள் உயிரை கொடுத்து இப்பகுதியை காத்து உள்ளனர்.

இந்த கல்வான் பகுதியில் சீன படையினர் கணிசமான அளவில் கூடாரங்கள் அமைத்து தங்கி உள்ளதாகவும், இந்திய வீரர்கள் அப்பகுதியை இடைவிடாது 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது வடக்கு சிக்கீமில் சீன படையினர் நகர்த்தப்பட்டு உள்ள நிலையில் அப்பகுதியை நோக்கி நமது வீரர்களும் நகர்த்தப்பட்டு வருகின்றனர்.

73 நாள் டோக்லாம் பிர்ச்சினையில் போர் வெடிக்கும் என்றளவிற்கு வரை பதட்டம் நிலவியது அதன் பிறகு தற்போது இருநாட்டு எல்லையோரம் பதட்டம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.