டாடா நிறுவனத்தின் இலகுரக கவச வாகனம் !!

  • Tamil Defense
  • May 8, 2020
  • Comments Off on டாடா நிறுவனத்தின் இலகுரக கவச வாகனம் !!

கடந்த 2014ஆம் ஆண்டு பாதுகாப்பு கண்காட்சியில் நமது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இங்கிலாந்தின் சூபாகேட் நிறுவவனத்துடன் இணைந்து தயாரித்த 4×4 இலகுரக கவச வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

இது வீரர்கள் போக்குவரத்து, கான்வாய் பாதுகாப்பு, நகர்ப்புற சண்டை, கண்காணிப்பு, எல்லையோர ரோந்து போன்ற பணிகளை மேற்கொள்ள வல்லது.

வடிவமைப்பு:

இந்த வாகனம் 8டன்கள் எடை கொண்டது, 1,500கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்டது.முன்பு இருவர், நடுவே நால்வர் என மொத்தம் 6 பேர் பயணிக்க முடியும், பின்பக்கம் சரக்குகளை ஏற்றி செல்ல முடியும். இது “வி” வடிவ கட்டுமானத்தை கொண்டது.குறைந்த பராமரிப்பு செலவுகளை கொண்டது மேலும் எதிர்காலத்தில் மேம்பாடு செய்வது எளிது.

கண்காணிப்பு அமைப்பு:

ஓட்டுநர் மற்றும் கட்டளை அதிகாரி ஆகிய இருவரும் வெளிபுறத்தை கண்காணிக்கும் வகையில் கேமரா உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் உள்பகுதியில் உள்ள திரையில் என்ன நடக்கிறது என காண முடியும், இதை தவிர வழிகாட்டி அமைப்புகள் , தெர்மல் இமேஜர்கள், தூரம் அளவிடும் லேசர் கருவி போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.

ஆயுத அமைப்பு:

வாகனத்தின் மேற்பகுதியில் உள்ள டர்ரெட்டில் 7.62மிமீ அல்லது 12.7மிமீ இயந்திர துப்பாக்கிகளை பொருத்த முடியும்.

டர்ரெட்டில் உள்ள கவசம் என்.ஐ.ஜே லெவல் 3 பாதுகாப்பை கொண்டது.

பாதுகாப்பு அமைப்புகள்:

இந்த வாகனம் சூபாகேட் எஸ்.பி.வி. 400 வாகனத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

துப்பாக்கி சுடு, சிதைவுகள், வெடிகுண்டுகள் போன்றவற்றில் இருந்து இது வீரர்களை பாதுகாக்கும்.