வங்காளதேச தரைப்படைக்கு இந்திய நிறுவனமான டாடாவின் வாகனம் !!

  • Tamil Defense
  • May 17, 2020
  • Comments Off on வங்காளதேச தரைப்படைக்கு இந்திய நிறுவனமான டாடாவின் வாகனம் !!

வங்காளதேச தரைப்படைக்கு அதிகாரப்பூர்வ வாகனத்திற்கான தேடலில் பல்வேறு போட்டியாளர்களை தோற்கடித்து நம் நாட்டின் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

பல மாதங்கள் நடைபெற்ற பல்வேறு கட்ட கடினமான சோதனைகளில் டாடா நிறுவனத்தின் ஹெக்ஸா வாகனம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் வங்காளதேச தரைப்படையின் அதிகாரப்பூர்வ வாகனமாக டாடா ஹெக்ஸா தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஹெக்ஸாவின் அதிக செயல்திறன், வங்காளதேச சந்தையில் இருக்கும் மவுசு, உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும் தன்மை போன்றவையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது ராணுவ பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். தற்போது 200ஹெக்ஸா வாகனங்களுக்கான ஆர்டரை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த வாகனம் 4×4 தன்மை கொண்டது, பொதுசந்தையில் கிடைக்கும் ஹெக்ஸாவின் அதே என்ஜின் தான் இதிலும் உள்ளது ஆனால் ராணுவ தரத்திற்கான சில தன்மைகளையும் கொண்டிருக்கும். ஹெக்ஸாவின் ராணுவ வடிவம் பொதுமக்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தரைப்படையின் அதிகாரப்பூர்வ வாகனமும் டாடா நிறுவன தயாரிப்பான டாடா ஸஃபாரி ஸ்டோர்ம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.