சீனாவுக்கு எதிராக செக்; ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் கையெழுத்திட உள்ள தைவான் !!

  • Tamil Defense
  • May 23, 2020
  • Comments Off on சீனாவுக்கு எதிராக செக்; ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் கையெழுத்திட உள்ள தைவான் !!

தைவான் நாட்டை ஒருங்கிணைப்போம் என சீனா கூறி வரும் சமயத்தில் தைவான் அரசு ஹார்ப்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கொண்ட கடலோர பாதுகாப்பு அமைப்பை வாங்க அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த அமைப்பு தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் இருக்கும் கடல் போக்குவரத்தை கண்காணிக்கவும், எதிரி இலக்குகளை அடையாளம் காணவும் தாக்கவும் உதவும். இது தைவானின் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரிக்க உதவும்.

கடந்த 70 வருடங்களாக தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்று வருகிறது இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தி புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்க அரசு தைவானுக்கு போர் விமானங்கள், டாங்கிகள், ஏவுகணைகள் என சுமார் 24பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக தைவானுக்கான ஆதரவை பன்மடங்கு அதிகரித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் கடந்த வருடம் மட்டுமே தைவானுக்கு சுமார் 10பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்க அனுமதி அளித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவிடமிருந்து தைவான் அதிக ஆயுதங்களை வாங்க ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. புதிய தைவான் அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது எனவும் கூறப்படுகிறது.