
அமெரிக்க அதிபர் டோனால்டு அவர்கள் வெள்ளியன்று செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்கா சூப்பர் டூப்பர் ஏவுகணை ஒன்றை மேம்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.தற்போது உலகில் செயல்பாட்டில் உள்ளதை விட 17 மடங்கு வேகத்தில் இந்த ஏவுகணை செல்லும் என அவர் கூறியுள்ளார்.
இந்த ஏவுகணை தற்போது இரஷ்யா மற்றும் சீனா மேம்படுத்தி வைத்துள்ள அனைத்து ஏவுகணைகளை விடவும் நவீனமானது என அவர் கூறியுள்ளாா்.
அமெரிக்காவின் ஸ்பேஸ் போர்ஸ் படைப்பிரிவிற்கான புதிய கொடியை ட்ரம்ப் வெளியிட்ட போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.