தமிழகத்திற்கு வரும் 2ஆவது தேஜாஸ் படையணி !!

  • Tamil Defense
  • May 25, 2020
  • Comments Off on தமிழகத்திற்கு வரும் 2ஆவது தேஜாஸ் படையணி !!

இந்திய விமானப்படையின் இரண்டாவது தேஜாஸ் படையணி கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தனது செயல்பாடுகளை தொடங்க உள்ளது.

இந்திய விமானப்படையின் 18ஆவது படையணியான பறக்கும் தோட்டாக்கள் படையணி வருகிற புதன்கிழமை அன்று கடைசி இயக்க ஒப்புதல் ரகத்தின் முதலாவது தேஜாஸ் விமானத்துடன் உயிர்ப்பிக்க பட உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக மீதமுள்ள விமானங்கள் படையணியில் இணைய சிறிது காலமாகும் என கூறப்படுகிறது.

இந்த படையணி சிறிது காலம் சூலூர் படைத்தளத்தில் இருந்து இயங்கும் அதன் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கலைகுண்டா படைத்தளத்தில் இருந்து இயங்கும்.

இந்த படையணி இதற்கு முன்னர் செயல்பாட்டில் இருந்த போது ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து மிக்27 விமானங்களுடன் இயங்கியது குறிப்பிடத்தக்கது.