மத்திய ரிசர்வ் காவல்படையின் விரைவு நடவடிக்கை பிரிவின் சீருடையை மாநில காவல்துறையினர் அணிய கூடாது !!

  • Tamil Defense
  • May 31, 2020
  • Comments Off on மத்திய ரிசர்வ் காவல்படையின் விரைவு நடவடிக்கை பிரிவின் சீருடையை மாநில காவல்துறையினர் அணிய கூடாது !!

மத்திய ரிசர்வ் காவல்படையின் ஒரு பிரிவான விரைவு நடவடிக்கை படையின் (Rapid Action Force) சீருடையை மாநில காவல்துறைகள் பயன்படுத்தக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய பிறகும் சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது.

தில்லி, பிஹார், மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானா ஆகிய மாநில காவல்துறையினர் இந்த சீருடையை அணிந்துள்ளனர்.

பல சமயங்களில் கலவர தடுப்பு நடவடிக்கைகளில் இவர்கள் இந்த சீருடையை அணிந்து கொண்டு செல்லும் போது தவறுதலாக சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் என அடையாளபடுத்தப்படுகின்றனர்.

ஆகவே சமீபத்தில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல்படையின் உயர்நிலை அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில காவல்துறை அதிகாரிகளிடம் நேரடியாக தொடர்பு கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.