அபாச்சியில் உள்ள லாங்போவ் ரேடார் !!

  • Tamil Defense
  • May 8, 2020
  • Comments Off on அபாச்சியில் உள்ள லாங்போவ் ரேடார் !!

1) இதன் முதன்மையான பணிகளில் ஒன்று நில தாக்குதல் மோட், வான் தாக்குதல் மோட் மற்றும் கடற்பகுதி தாக்குதல் மோட் ஆகியவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளும். மேலும் ஒரே நேரத்தில் 256இலக்குகள் வரை அடையாளம் கண்டு அதில் உடனடியாக தாக்க வேண்டிய 16இலக்குகளை தாக்குவதற்கு உதவும். இரவு பகல் பல்வேறு காலநிலைகள் என அனைத்து சூழல்களிலும் இந்த ரேடார் திறம்பட இயங்கும்.

அபாச்சி தாக்குதல் உலங்கு வானூர்தியில் உள்ள லாங்போவ் தாக்குதல் கட்டுபாட்டு ரேடார் மிகவும் திறன் வாய்ந்தது ஆகும்.இந்த ரேடார் விமானிகளுக்கு இலக்குகள் குறித்த தகவல்கள், தாக்குதல் குறித்த தகவல்கள், சுற்றுச்சூழல் குறித்த தகவல்கள் ஆகியவற்றை திறம்படை அதிகபட்ச துல்லியத்துடன் அளிக்கிறது.

2) இதன் கண்காணிப்பு எல்லை 8கிமீ முதல் 16கிமீ வரை அதிகரிக்க முடியும் மேலும் 360டிகிரியில் நீர்,நிலம், வானம் ஆகிய மூன்று பகுதிகறிலும் 4மடங்கு அதிக திறனுடன் சிறியி ஆளில்லா வாகனங்களையும் கூட கண்டறியும்.

3 இது பறக்கும் பகுதியை சார்ந்த அதாவது புவியியல் அமைப்பை சார்ந்த தகவல்களை துல்லியமாக விமானிகளுக்கு வழங்கி போர்க்களத்தை சரியாக புரிந்து கொள்ள உதவுகிறது.

4) இந்த லாங்போவ் ரேடாரானது எந்த தாக்குதல் உலங்கு வானூர்தியிலும் இல்லாத அளவுக்கு திறன் கொண்டது. மேலும் இது போரில் நிருபிக்கப்பட்ட செயல்பாட்டை கொண்டதாகும்.