
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்க கடற்படையின் விமான தளமான நேவல் ஏர் ஸ்டேஷன் பென்ஸிகோலாவில் பயிற்சியில் இருந்த சவுத அரேபிய விமானப்படையின் விமானி மொஹம்மது அல்ஷம்ரானிக்கு அல் காய்தா இயக்கத்துடன் இருந்த தொடர்பு அம்பலமாகி உள்ளது.
இந்த விமானியின் ஆப்பிள் ஐஃபோன்களில் இருந்த லாக்கை ஆப்பிள் நிறுவனம் எடுத்து கொடுக்காத நிலையில் எஃப்.பி.ஐ தொழில்நுட்ப வல்லுநர்கள் எடுத்த நிலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்குறிப்பிட்ட நபர் பல ஆண்டுகளாக அல் காய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டில் இவர் மூளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாத ஆதரவாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
தாக்குதலுக்கு முன்னர் தளத்தை பற்றி ஆய்வு செய்து திட்டம் தீட்டிய பின்னர் தாக்குதலை அரங்கேற்றி உள்ளான்.
அல்ஷம்ரானியின் மொபைல்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஏமனில் அவனது கூட்டாளி ஒருவனை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ஒன்றில் கொன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.