கண்ணிவெடி தாக்குதலில் ஆறு பாக் வீரர்கள் உயிரிழப்பு-பலுசிஸ்தான் போராளிகள் பொறுப்பேற்பு

  • Tamil Defense
  • May 9, 2020
  • Comments Off on கண்ணிவெடி தாக்குதலில் ஆறு பாக் வீரர்கள் உயிரிழப்பு-பலுசிஸ்தான் போராளிகள் பொறுப்பேற்பு

பாக் இராணுவ அதிகாரி உட்பட ஆறு பாக் வீரர்கள தெற்கு பலுசிஸ்தான் பகுதியில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.ஈரான்-பாக் எல்லைக்கு அருகே 14கிமீ தூரத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கின் கெச் மாவட்டத்தின் புலெடா என்னும் சமவெளி பகுதியில் இருந்து வாகனங்களில் திரும்பி வந்து கொண்டிருந்த ஃப்ரான்டியர் கார்ப்ஸ் தெற்கு பலுசிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாக் இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அதிகாரி மேஜர் நதீம் அப்பாஸ் பாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது.பலுசிஸ்தான் விடுதலைக்காக போராடி வரும் பலுசிஸ்தான் லிபேரேசன் ஆர்மி போராளி குழு தாக்குதலுக்கு பொறுப்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாக் இராணுவம் பலுசிஸ்தான் மக்களை வதைத்தும்,பலூச் தலைவர்கள் கொன்றும் பல மனித உரிமை மீரல்களை செய்துள்ளது.