
மே மாத இறுதிக்குள் இந்திய விமானப்படை தனது இரண்டாவது தேஜஸ் படையணியை செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது.
இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா கூறுகையில் “முதலாவது தேஜாஸ் படையணியை ஜூலை 2016ல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தோம், இரண்டாவது படையணியை இந்த வருடம் ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வர இருந்த நிலையில் கொரோனா தொற்றால் தாமதம் ஏற்பட்டது” என்றார்.
இந்த இரண்டாவது தேஜஸ் படையணி இந்திய விமானப்படையின் 18ஆவது படையணி ஆகும். இந்த அணியின் புனைப்பெயர் பறக்கும் தோட்டாக்கள் (ஃப்ளையிங் புல்லட்ஸ்) ஆகும். இந்த படையணியும் முதலாவது தேஜஸ் படையணி நிலைநிறுத்துப்பட்டு உள்ள கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.