
ஞாயிற்றுக்கிழமை அன்று ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சில அமெரிக்க படைதளங்கள் மீது ரஷ்ய விமானப்படையின் சு57 ரக விமானங்கள் கண்டுபிடிக்க படாமல் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி ரஷ்ய உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் ரஷ்ய விமானங்கள் துருக்கி வான்வெளியை பயன்படுத்த துருக்கி தடை விதித்துள்ளது ஆகவே சிரியாவில் இருந்து ஈராக்குக்கு செல்கையில் அமெரிக்க படைதளங்கள் மீது தான் பறக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இப்படி ஒரு பயணத்தில் தான் சு57 விமானங்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் தலா 3 அமெரிக்க படை தளங்கள் மீது பறந்துள்ளன.
அமெரிக்காவில் சுகோய்57 விமானங்கள் மோசமாக விமர்சிக்கப்படும் நிலையில் இந்த நிகழ்வு அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி உள்ளது.
இந்த விமானத்தை இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்து வந்த நிலையில் விமானத்தின் மேம்பாட்டுக்கு இன்றியமையாத சில தகவல்களை ரஷ்யா தர மறுத்த காரணத்தால் நாம் விலகி கொண்டது குறிப்பிடத்தக்கது.