ரஷ்யா எஸ்400 அமைப்பின் 400கிமீ தொலைவு செல்லும் ஏவுகணையின் திறனை நிருபித்து காட்டியது !!

  • Tamil Defense
  • May 14, 2020
  • Comments Off on ரஷ்யா எஸ்400 அமைப்பின் 400கிமீ தொலைவு செல்லும் ஏவுகணையின் திறனை நிருபித்து காட்டியது !!

சமீபத்தில் ரஷ்யா எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியான 9எம்83எம் ஏவுகணையை அதன் அதிகப்பட்ச தாக்குதல் தொலைவான 400கிம் வரை ஏவி அதன் திறனை நிருபித்துள்ளது. பாதுகாப்பு வல்லுனர்கள் இந்த சோதனை இந்தியா போன்ற நுகர்வோர் நாடுகளுக்கு நிருபித்து காட்டவே என கருதுகின்றனர்.

எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பில் 40கிமீ செல்லும் 9எம்96இ, 120கிமீ செல்லும் 9எம்96இ2, 250கிமீ செல்லும் 48என்6 மற்றும் 400கிமீ செல்லும் 9எம்83எம் போன்ற ஏவுகணைகள் உள்ளன. இந்தியா இதில் 250கிமீ மற்றும் 400கிமீ தொலைவு வரை செல்லும் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

சீனா இதில் 120கிமீ மற்றும் 250கிமீ செல்லும் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் 400கிமீ செல்லும் ஏவுகணையை இந்தியா மட்டுமே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அரசு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.